( கமலநாதன் )

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறைகள் இரண்டு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்கைய வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வித்தில் காண்பித்துக்கொண்டு அவற்றை விற்பனை செய்யும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அகில இலங்கை துறைமுகங்கள் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் அம்மபாத்தோட்டை துறைமுகங்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறைகள் இரண்டு ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை உள்ளிட்ட விவகாரங்களின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை துறைமுகங்கள் சேவையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் இலாபமீட்டும் துறைமுகத்தின் பகுதிகளை வேறுபடுத்தி விற்பனை செய்ய நாங்கள் ஒருபோதும் இடமளியோம். இதனால் பல துறைமுகள் ஊழியர்கள் தொழிலிழந்து நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலைமை ஏற்படும். அதனாலே இந்த விவகாரம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை தகவல் அறியும் சட்டமூலத்தின் வாயிலாக எமக்கு பெற்றுத்தாருங்கள்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளரை இன்று சந்தித்து தமது கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அகில இலங்கை துறைமுகங்கள் சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி மஹாகமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.