கர்மாவை அகற்றும் கர்ம விமோசன கிளென்ஸிங்..!

06 Sep, 2023 | 07:45 PM
image

கடினமாக உழைத்தும் முன்னேற முடியவில்லை என பலர் தங்களை நொந்து கொள்வர். வேறு சிலரோ பல்வேறு காரணங்களை கண்டறிந்து இதுதான் முன்னேற முடியாததற்கு காரணம் என பட்டியலிடுவர்.  

ஆனால் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது போல்  நாம் செய்யும் நல்ல செயல்களும் நல்லவை அல்லாத செயல்களும் தான் கர்மாவாக மாறி எம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது.

இந்த கர்மா என்பது பிராப்த கர்மா, பிறவி கர்மா என பல்வேறு கர்மாக்களை நாளாந்தம் நாம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த கர்மாக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அதனை சுத்தப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எம்முடைய முன்னேற்றம் என்பது ஒருபோதும் நிகழாது. அதாவது நமக்கு உறவினர்கள் உதவவில்லை  நண்பர்கள் உதவவில்லை கேட்ட இடத்திலிருந்து கடன் கிடைக்கவில்லை  தொடங்கிய தொழில் நஷ்டத்தை மட்டுமே சந்தித்தது. 

லாபத்தை சிறிதும் தரவில்லை என பல்வேறு எதிர் நிலையான விடயங்களுக்கு எம்முடனேயே இருக்கும் சுத்தப்படுத்தப்படாத அசுத்த கர்மாக்கள் தான் காரணம். 

இந்த கர்மாக்களை தான் கர்ம விமோசன கிளென்ஸிங் என்ற முறையில் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எம்முள் நல்ல கர்மாக்கள் இயங்கத் தொடங்கி, நாம் கேட்ட இடத்திலிருந்தும்  கேட்காத உதவிகளும் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடைந்து, உற்சாகமாக உழைத்து முன்னேற்றத்தில் பாதையில் பயணிப்போம்.

இந்த கர்ம விமோசன கிளென்ஸிங் என்பது எம்முடைய கர்மாக்களை இத்துறை நிபுணர்கள் மூலம் சுத்திகரித்துக் கொள்வதாகும். இது சிலருக்கு கட்டணம் கூடுதலாகவும் அல்லது பொருளாதார ரீதியாக சந்திப்பதற்கு கடினமானதாகவோ பலருக்கும் இருக்கக்கூடும். இந்நிலையில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் இத்தகைய கர்ம விமோசன கிளென்சிங்கை நாமே எம்முடைய வீட்டிற்குள் செய்து கொள்ள இயலும்.

அது எப்படி என்பதை தொடர்ந்து காண்போம். காலையில் எழுந்ததும் கிழக்கு திசை நோக்கி அமைதியான இடத்தில் தூய்மையான வெள்ளை ஆடை ஒன்றை கீழே விரித்து அதன் மீது அமர்ந்து, நெஞ்சுக்கு நேராக இரு கரம் கூப்பி, இந்த பிரபஞ்சத்தை வணங்க வேண்டும் அதன் போது பிங்க் மற்றும் நீல வண்ணத்தில் ஒளி கற்றைகள் எம் மீது படர்வதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். 

இந்த கற்பனை 15 நிமிடம் வரை நீடித்திருக்க வேண்டும். அதன் பிறகு மூன்று கற்பூரத்தை எடுத்து அதனை உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு ஏற்ற வேண்டும். அதன் போது எரிந்து கொண்டிருக்கும் கற்பூர ஆரத்தியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு நேராக உங்களுடைய குளியலறைக்குச் சென்று நீராட வேண்டும். இதனை பின்பற்றினால் உங்களுடைய கர்மா சுத்திகரிக்கப்படும் அல்லது சுத்தப்படுத்தப்படும்.‌

இதனை ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த கிழமைகளில் காலை வேளைகளில் மேற்கொள்வது நலம். உடனே எம்மில் சிலர் நான் பிறந்த கிழமை தெரியவில்லை நினைவில் இல்லை நான் எப்படி கர்ம விமோசனத்தை பெறுவது? என கேட்பர். இவர்கள் சனிக்கிழமையை தெரிவு செய்து கொண்டு, அதிலும் குறிப்பாக எமகண்ட நேரத்தை தெரிவு செய்து மேற்கூறிய பிரார்த்தனை முறையை மனமுருக பின்பற்றினால் உங்களுடைய கர்மா குறிப்பாக அசுத்த கர்மா சுத்திகரிக்கப்படும். இதன் பிறகு உங்களிடத்தில் நேர் நிலையான ஆற்றல் பரவும். இதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்ட இடத்திலிருந்தும் கேட்காத இடத்திலிருந்தும் எதிர்பார்க்காத பல உதவிகள் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

தகவல் : ப்ரமத்வஜராஜ்

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்