குழந்தைகளுக்கு ஏற்படும் ரெட் ஃபிளாக்ஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

06 Sep, 2023 | 07:44 PM
image

பிறக்கும் குழந்தைகள் மூன்று மாதத்தில் ஓரெழுத்துச் சொற்களையும், ஆறு மாதத்தின் ஈரெழுத்து சொற்களையும், ஒரு வயது பூர்த்தியாகும் போது முழுமையாக அர்த்தமுள்ள ஒரு சொல்லையும் பேசும். 

ஒன்றிலிருந்து ஒன்றரை வயதிற்குள் ஏராளமான அர்த்தமுள்ள ஒற்றைச் சொற்களையும் பேசத் தொடங்கும். இரண்டு வயது நிறைவடைவதற்குள் இரண்டு சொற்களை தொடர்ச்சியாக பேசும். 

இரண்டு முதல் இரண்டரை வயது நிறைவடைவதற்குள் ஏராளமான தன் தேவையை தெரிவிக்கும் வகையில் இரண்டு இரண்டு சொற்களை பேசும்.

மூன்று வயது நிறைவடைவதற்குள் மூன்று சொற்கள் அடங்கிய ஒரு சிறிய வாக்கியத்தை குழந்தைகள் பேசுவார்கள். இதன் போது குழந்தைகளின் மொழி மற்றும் பேச்சுத் திறன் வெளிப்படும்.‌ 

இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அந்த குழந்தைக்கு ரெட் ஃபிளக்ஸ் எனப்படும் பேச்சுத்திறன் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

பொதுவாக எம்முடைய பிள்ளைகளின் பெற்றோர்கள் குழந்தையின் பேச்சுத்திறன் மேம்படவில்லை என்பதை மூன்று வயதில் அல்லது மூன்று வயதிற்குப் பிறகுதான் கண்டறிந்து அது தொடர்பான சிகிச்சைக்கோ அல்லது ஆலோசனைக்கோ மருத்துவர்களை நாடுகிறார்கள். 

மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் 'அம்மா சொல்லு அம்மா சொல்லு அம்மா சொல்லு ' என மொழிகளையும், சொற்களையும் கற்பிக்கிறார்கள். 

அந்த வயதில் அம்மாவின் அனைத்து செயல்களையும் உற்று நோக்கும் பிள்ளைகள்.. அம்மா சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்கிறது. இது அவர்களின் மொழி வளர்ச்சியை அதிகரிக்காது என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் தங்களின் தேவைகளை சுயமாக சிந்தித்து மேற் சொன்ன வகையில் ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டுக்குள் வாக்கியமாக பேசத் தொடங்குவர். இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் காத்திருக்காமல் அந்தந்த வயதிற்குள் மருத்துவர்களை சந்தித்து, இது தொடர்பான ஆலோசனையும், பிரத்யேக பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குள் அவர்களின் பேச்சுத் திறன் குறித்த பரிசோதனையை அனைத்து பெற்றோர்களும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதன் போது குழந்தையின் மொழி திறன் மற்றும் பேச்சுத் திறனின் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருந்தால்.. அதனை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய பயிற்சியை வழங்கி, பிள்ளைகளின் பேச்சுத் திறனை முழுமையாக வளர்த்தெடுக்கலாம்.

டொக்டர் வைஷ்ணவி

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20
news-image

“நல்ல மருத்துவர்” என்பவர் யார்?

2024-09-08 11:16:04
news-image

குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-08-31 16:55:30
news-image

முதுகு வலிக்கான நவீன நிவாரண சிகிச்சை

2024-08-29 19:52:57
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-08-28 17:07:29