8 நோயாளர்களுக்கு  H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிலை வைத்திய ஆய்வு பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமூலம் குறித்த 8 நோய் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதம வைத்திய பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நோய் தொற்றுடையவர்களாக சந்தேகிக்கப்படும் 28 இலிருந்து 30 வரையான நோயாளர்கள் தொடர்ச்சியான சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக குறித்த வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு நோய்க்கான அறிகுறியாக தொடர்ச்சியான இருமல், தலைவலி, வயிற்றோட்டம், உடம்புவலி மற்றும் தொண்டை வலி என்பன தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களில் கர்ப்பிணி பெண்கள், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள்,  65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீண்டகாலமாக புற்று நோய், நீரிழிவு நோய், மற்றும் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் H1N1  நோய் தொற்றை வேகமாக பெறக்கூடியவர்களாக, இனம்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.