உலகம் முழுவதும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்சன் நோய் எனப்படும் நினைவுத்திறன் இழப்பு பாதிப்பிற்கு ஆளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது புதிதாக கண்டறியப்பட்டிருக்கும் டீப் ப்ரைய்ன் ஸ்டிமுலேஷன் எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக 50 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பார்க்கின்சன் எனும் நடுக்குவாத நோய் ஏற்படுகிறது. இதன் அறிகுறி தசைகளிலோ அல்லது தசையற்ற பகுதிகளிலோ ஏற்படலாம். பொதுவாக கை, கால்களில் அல்லது தாடை பகுதியில் நடுக்கம் ஏற்படுவதை உணரலாம். வேறு சிலருக்கு கட்டைவிரலின் இயக்கத்தில் தன்னிச்சையான மாற்றங்கள் ஏற்படுவதையும் காணலாம்.
இதன் அடுத்த கட்ட அறிகுறியாக தசைகள் விரைப்பு அடையும். சிலருக்கு நாளாந்த இயக்கங்களை முடக்கக்கூடிய அளவில் கட்டுப்பாடற்ற தசை இறுக்கம் ஏற்படக்கூடும். இதன் காரணமாக அவர்களின் செயல்களில் வேகம் குறையும்.
பொதுவாக பசியாறுதல், நீராடுதல் போன்ற எளிய செயல்களை செய்வதிலும் கூட காலதாமதம் ஏற்படக்கூடும். இதன் தொடர்ச்சியாக சமநிலை இழப்பு, மன அழுத்தம் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த தருணத்தில் உமிழ் நீர் சுரப்பதில் கட்டுப்பாடற்ற நிலை உண்டாகக்கூடும். வேறு சிலருக்கு பேச்சுத் திறன், எழுதுதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்பிற்கு மரபணு குறைபாடு தான் காரணம் என்றாலும் துல்லியமான காரணத்தை அறிஞர்கள் இன்னும் முழுமையாக கண்டறியவில்லை. தற்போது வரை இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகளை தான் அளித்து வருகிறார்கள்.
மேலும் மருந்தியல் சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த இயலாத போது அவர்களுக்கு டீப் பிரைய்ன் ஸ்டிமுலேஷன் எனப்படும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது மார்பின் ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகள் மூலம் அதிர்வலைகளை உருவாக்கி மூளையின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக தூண்டப்படுகிறது. இதன் மூலம் மூளையின் இயக்கம் ஊக்குவிக்கப்பட்டு, இத்தகைய நோயின் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மிகவும் இளம் வயதிலேயே இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்தியல் சிகிச்சை முழுமையான பலன் அளிக்காதவர்களுக்கும் வேறு சில காரணங்களுக்காகவுமே இத்தகைய டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனும் நவீன சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
டொக்டர் பாலசுப்பிரமணியம்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM