17 வயதுக்குட்பட்ட தம்புள்ளை கிரிக்கெட் அணியில் 3 யாழ். வீரர்கள்

06 Sep, 2023 | 10:00 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் யாழ். மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மூவர் தம்புள்ளை அணிக்காக விளையாடி யாழ். மாவட்டத்துக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தனர். 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் மாகாண கிரிக்கெட் போட்டிகளில் ஒரே நேரத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் ஒரு அணியில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். மத்திய கல்லூரி வீரர் ஜே. ஆர். நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் ஜெயச்சந்திரன் அஸ்நாத் ஆகிய மூன்று யாழ். வீரர்களே தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தனர். 

இந்த மூவரும் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். 

வலதுகை லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான ஆகாஷ், கடந்த வருடம் 15 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டியில் தம்புள்ளை அணிக்காக விளையாடியவராவார்.

நியூட்டன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதுடன் அஸ்நாத் சைனாமன் பந்துவீச்சாளர் ஆவார்.

இந்த மூவரும் திறமையாக பந்துவீசியதாகவும் அவர்கள் மூவரும் வருங்காலத்தில் சிறந்த நிலையை அடைவர் எனவும் இலங்கை இளையோர் அணி தேர்வாளர் ரஞ்சன் பரணவித்தான தெரிவித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த், வி. டினோஷன் ஆகிய இருவரும் தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தனர்.

தற்போது அவர்கள் இருவரும் முதல் தர கழக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அவர்களில் வியாஸ்காந்த் கடந்த 4 லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயங்களில் ஜெவ்னா (ஸ்டாலியன்ஸ் ஃ கிங்ஸ்) அணிக்காக விளையாடி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40