மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், பன்றிகளின் தோல் அல்லது முடியில் இருந்து செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வர்ணம் பூசும் தூரிகைகள் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில் பன்றி மற்றும் நாய்களுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளும் அனுமதியின்றி விற்பனை செய்யப்படக்கூடாது எனச் சட்டம் இருக்கிறது.

இந்த நிலையில், வர்ணம் பூசுவதற்கும் ஓவியம் தீட்டவும் பன்றியின் முடிகள் அடங்கிய தூரிகைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக எழுந்த புகார்களையடுத்து, நாடு முழுவதும் அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்போது, சந்தேகத்துக்கு இடமான ஆயிரக்கணக்கான தூரிகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து, குறித்த தூரிகைகளை இறக்குமதி செய்து வினியோகித்த வர்த்தக உரிமையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் 22 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.