யாழ். மாவட்டத்திற்கு விஐயம் செய்யும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் யாழ். மாவட்டத்திற்கு விஐயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையும் பாரியளவில் அபிவிருத்தியை அடைந்துள்ளது. 

2011 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையில் 11 582 சுற்றுலாப் பயணிகள் யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்துள்ள நிலையில், 2014 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 25580 சுற்றுலா பயணிகள் விஐயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.