சனல் - 4 காணொளி : சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வோம் : கோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பேராயரும் கேட்டுக்கொண்டார் : மனுஷ

05 Sep, 2023 | 02:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன் குறிப்பிட்டவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக இருந்தார்கள்.

சனல் 4  வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என  வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி  ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் - 4 வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் பாரதூரமானது.

நாட்டு மக்களை கொன்று இரத்தத்தின் ஊடாக ஒரு தரப்பினர் ஆட்சியை கைப்பற்றியிருந்தால் அது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல்-4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினோம்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

அத்துடன் தேவையாயின் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.

ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் தான் இவ்வாறான காணொளிகள் வெளியாகுகின்றன.

கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறாயின் அதிகாலையில் சென்று  கோட்டபய ராஜபக்ஷவுக்கு  வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது குறிப்பிட்டார்.

மறுபுறம் ஒருதரப்பினர் அழுதுகொண்டு ஒரு தரப்புக்கு சார்பாக செயற்பட்டார்கள். ஆகவே இவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக  செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக...

2025-03-15 17:30:49
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57