கொழும்பு பதுளை ரயில் பாதையிலும் மல்லிகைப்பூ பகுதியிலும் தீ - பல ஏக்கர்கள் எரிந்து நாசம்

Published By: Robert

08 Feb, 2017 | 02:43 PM
image

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் அட்டன் மல்லிகைப்பூ பகுதியிலும் இன்று பகல் 12.00 மணியளவில் தீயினால் பல ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் நீர்பாசனை பிரதேசமான பகுதியில் இத்தீ ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் கடும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ நிலங்களை துப்புரவு செய்வதற்கு அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இத்தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்பாசனை வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இத்தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54