கைவிடுகிறதா அமெரிக்கா ?

Published By: Vishnu

04 Sep, 2023 | 08:41 PM
image

ஹரிகரன்

அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கட­மை­களைப் பொறுப்­பேற்று சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், வடக்கில் விரி­வான பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருக்­கிறார்.

இந்தப் பய­ணத்தின் போது அவர் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, மத விவ­கா­ரங்­களில் மாத்­தி­ர­மன்றி, பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளிலும் அதிக அக்­கறை செலுத்­தி­யி­ருக்­கிறார்.

யாழ்ப்­பாணப் பய­ணத்தை முடித்துக் கொண்டு கடந்த மாதம் 24ஆம் திகதி கிளி­நொச்­சிக்குச் சென்ற  அவர், அங்கு இலங்கை இரா­ணு­வத்தின் முத­லா­வது கோர்ப்ஸ் படை­ய­ணியின் தள­ப­தி­யான மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமு­னு­க­மவைத்  சந்­தித்­தி­ருந்தார்.

இந்தச் சந்­திப்பின் போது இரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங்கின் டுவிட்டர் பக்­கத்­தி­லேயே இந்த இரண்டு விட­யங்கள் குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

இலங்கை இரா­ணு­வத்­துடன் அமெ­ரிக்கா வரை­ய­றுக்­கப்­பட்ட தொடர்­புகள் - உற­வு­க­ளையே பேணி வரு­கி­றது.

குறிப்­பாக, 2009இல் போர் முடி­வுக்கு வந்த பின்னர், இலங்கை இரா­ணு­வத்தின் மீது சுமத்­தப்­பட்ட போர்க்­குற்­றச்­சாட்­டு­களை அடுத்து, இரா­ணு­வத்­து­ட­னான உற­வு­களை அமெ­ரிக்கா மட்­டுப்­ப­டுத்திக் கொண்­டது.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்த நியா­ய­மான, நம்­ப­க­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அமெ­ரிக்­காவின் வலி­யு­றுத்­தலை அர­சாங்கம் கண்டு கொள்­ள­வில்லை.

அதனால் இலங்கை இரா­ணு­வத்­துக்கு மனி­தா­பி­மான கண்­ணி­வெ­டி­ய­கற்றல் பயிற்­சி­களை வழங்­கு­வ­துடன் அமெ­ரிக்கா தனது உற­வு­களை மட்­டுப்­ப­டுத்திக் கொண்­ட­தாக, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் முன்னர் வெளி­யிட்ட நாடு­களின் மனித உரி­மைகள் நிலைமை குறித்த அறிக்­கை­களில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று நம்­பப்­பட்ட படை அதி­கா­ரிகள் பலரை அமெ­ரிக்கா தனது நாட்­டுக்குள் நுழை­வ­தற்கும் தடை­வி­தித்­தி­ருக்­கி­றது.

இலங்கை கடற்­ப­டையைப் பலப்­ப­டுத்­து­வதில் அதிக கவனம் செலுத்­து­கின்ற போதும், விமா­னப்­ப­டை­யுடன் வலு­வான உற­வு­களைப் பேணு­கின்ற போதும், இலங்கை இரா­ணு­வத்­துடன் அத்­த­கைய நெருங்­கிய உற­வு­களை அமெ­ரிக்­கா­வினால் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்க வேண்­டி­ய­வர்கள் அல்­லது அந்தக் குற்­றச்­சாட்­டுக்குப் பதி­ல­ளிக்க - பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் எனப் பட்­டி­ய­லி­டப்­படும் இரா­ணுவ அதி­கா­ரிகள் தலை­மைத்­துவக் கட்­ட­மைப்­பு­களில் காணப்­பட்­டதும் இலங்கை இரா­ணு­வத்­துக்கும், அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களில்  ஆழ­மான விரி­சல்கள் நீடித்­த­மைக்கு ஒரு கார­ண­மாகும்.

போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்டும் என்றும், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றும் அமெ­ரிக்கா தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வதும், அந்த இலக்கை எட்­டு­வ­தற்­காக அமெ­ரிக்கா பல்­வேறு தடை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­வதும் விரி­சல்­க­ளுக்கு முக்­கிய காரணம்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­னணி நிலை­யி­லேயே, வடக்­கிற்குப் பயணம் மேற்­கொண்ட அமெ­ரிக்க தூதுவர், கிளி­நொச்­சியில் இரா­ணு­வத்தின் முத­லா­வது கோர்ப்ஸ் படை­ய­ணியின் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் அமு­னு­க­ம­வுடன்  கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யி­ருக்­கிறார்.

இந்தக் கலந்­து­ரை­யாடல் இரண்டு முக்­கிய விவ­கா­ரங்­களை மையப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஒன்று- இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்தும், இலங்­கையின் முயற்­சிகள் உள்­ளிட்ட, பாது­காப்பு ஒத்­து­ழைப்­புக்­கான அமெ­ரிக்­காவின் பகி­ரப்­பட்ட கடப்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இரண்டு- நிலை­யான அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு, சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதன் அவ­சியம் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா கடந்த ஒன்­றரை தசாப்­தங்­களில் நிலை­யான அமைதி தொடர்­பாக பல்­வேறு தரப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது. இப்­போது, முதல்­மு­றை­யாக இரா­ணு­வத்தின் படை­யணி மட்­டத்­துக்கு அந்த விவ­கா­ரத்தைக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

அது­போ­லவே, பாது­காப்பு ஒத்­து­ழைப்பு மற்றும் இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வது குறித்தும் இப்­போது புதி­தாக கவனம் செலுத்த தொடங்­கி­யி­ருக்­கி­றது. அத­னையும் கொழும்பில் இருந்து முன்­னெ­டுக்­காமல், இரா­ணு­வத்தின் பிர­தான படை­யணி மட்­டத்­துக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

இரா­ணு­வத்தின் முத­லா­வது கோர்ப்ஸ் படை­ய­ணியின் தள­பதி மேஜர் ஜெனரல் அமு­னு­க­ம­வுடன், அமெ­ரிக்க தூதுவர் ஜூலி சங் பேச்சு நடத்­திய இந்த இரண்டு விட­யங்­களும், ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டவை.

கடந்த ஒன்­றரை தசாப்­தங்­க­ளாக அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற விரி­சல்­களை சரிப்­ப­டுத்தும் அமெ­ரிக்­காவின் விருப்­பத்­தையும் இது வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

மனித உரிமைக் கார­ணங்­களை சுட்­டிக்­காட்டி, பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தி இலங்கை இரா­ணு­வத்­திடம் இருந்து வில­கி­யி­ருந்த அமெ­ரிக்கா,  இப்­போது தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொள்ள முற்­ப­டு­கி­றதா என்ற சந்­தேகம் தோன்­றி­யி­ருக்­கி­றது.

இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்தும் இலங்­கைக்கு அமெ­ரிக்கா உதவ முற்­ப­டு­வ­தாக தெரி­கி­றது. அதற்­காக இரா­ணு­வத்­துடன் கீழ்­மட்ட உற­வு­களை பலப்­ப­டுத்த முற்­ப­டு­கி­றது.

இலங்கை கடற்­ப­டையின் மெரைன் படைப்­பி­ரி­வுடன் அமெ­ரிக்கா கூடுதல் தொடர்­பு­களை பேணி வரு­வது கண்­கூடு.

அவ்­வாறே அமெ­ரிக்கா முத­லா­வது கோர்ப்ஸ் படை­ய­ணி­யுடன் தொடர்­பு­களை உரு­வாக்க முற்­ப­டு­கி­றதா என்ற கேள்­வியும் உள்­ளது. மெரைன் படைப்­பி­ரிவை உரு­வாக்­கி­யது போல,இலங்கை இரா­ணு­வத்தின் சிறப்புப் படைப்­பி­ரி­வுக்கும் பயிற்­சி­களை வழங்­கி­யதும் அமெ­ரிக்கா தான்.

முத­லா­வது கோர்ப்ஸ்ஸில் இடம்­பெற்­றுள்ள விசேட படைப்­பி­ரிவு மற்றும் 53 ஆவது டிவிசன் ஆகி­யன, முன்னர் அமெ­ரிக்க இரா­ணுவ அதி­கா­ரி­களால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டவை.

கிறீன் பெரட்ஸ் என்ற அமெ­ரிக்­காவின் சிறப்புப் படைப்­பி­ரிவைச் சேர்ந்த அதி­கா­ரிகள், 1997இல், குகு­லே­கங்­கவில் இலங்கை இரா­ணு­வத்­துக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.

2000ஆம் ஆண்டு ஆனை­யி­றவுத் தளம் புலி­களால் முற்­று­கை­யி­டப்­பட்ட போது, அது கடைசி வரையில் வீழ்ந்து விடாது என்றே அமெ­ரிக்க அதி­கா­ரிகள் நம்­பி­யி­ருந்­தனர்.

தங்­களால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட 53 ஆவது டிவிசன் படை­யினர் அங்கு நிலை­கொண்­டி­ருப்­பதால், அவ்­வா­றான நிலை ஏற்­ப­டாது என்று அவர்கள் நம்­பினர்.

ஆனால்,  அந்த நம்­பிக்­கையை உடைத்து, ஆனை­யி­றவைப் புலிகள் கைப்­பற்­றி­யமை வர­லாறு. அதற்குப் பிற்­பட்ட காலங்­களில் அமெ­ரிக்கா இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பெரி­ய­ளவில் பயிற்­சி­களை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. இப்­போது இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்தும் திட்­டத்­துக்கு அமெ­ரிக்கா ஒத்­து­ழைக்கக் கூடும்.

ஆனால்,  அதற்கு சில தடைகள் இருக்­கின்­றன. 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா கடும் போக்கை கடைப்­பி­டித்து வந்­தி­ருக்­கி­றது.

இறு­திக்­கட்டப் போரில் இடம்­பெற்ற மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்று வலி­யு­றுத்தி, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிலும் தீர்­மா­னங்­களை முன்­னின்று கொண்டு வந்து நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றது.

இந்த தீர்­மா­னங்­களால் இது­வ­ரையில், பொறுப்­புக்­கூறல் இலக்கை அடைய முடி­ய­வில்லை என்­பது வேத­னை­யான உண்மை.

இவ்­வா­றான நிலையில் திடீ­ரென இலங்கை இரா­ணு­வத்­துடன் அமெ­ரிக்கா நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள முயன்றால், அது தவ­றா­ன­தொரு விம்­பத்தை காண்­பிக்கும்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து போவார்கள், அமெ­ரிக்­காவின் மீது நம்­பிக்­கை­யீனம் ஏற்­படும்.

இவ்­வா­றான நிலையில் தான் அமெ­ரிக்கத் தூதுவர் இரண்­டா­வது விட­யத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார். சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலம் நிலை­யான அமை­தியை அடைய முடியும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்தக் கருத்தின் ஊடாக, இரா­ணு­வத்­தினர் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் குறிப்­பாக தமி­ழர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­ப­வில்லை என்றும் எடுத்துக் கொள்­ளலாம்.

அதே­வேளை, இவ்­வாறு நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலம், இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்தும் திட்­டத்­துக்கு அமெ­ரிக்­காவின் ஒத்­து­ழைப்பை வழங்க முடியும் என்று கூறி­ய­தா­கவும் எடுத்துக் கொள்­ளலாம்.

எவ்­வா­றா­யினும், இதனை அவர் ஏன், கிளி­நொச்­சியில் போய், இரா­ணு­வத்தின் முத­லா­வது கோர்ப்ஸ் முன்­னி­லையில் கூற வேண்டும்? அதுதான் முக்­கி­ய­மான கேள்வி.

முத­லா­வது கோர்ப்ஸ் தான் இலங்கை இரா­ணு­வத்­தி­லேயே முதன்­மை­யான படை­ய­ணி­களை உள்­ள­டக்­கி­யது.

53, 58 ஆவது டிவி­சன்கள் மற்றும் விசேட படைப்­பி­ரிவு, கொமாண்டோ படைப்­பி­ரிவு ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யது தான்,முத­லா­வது கோர்ப்ஸ். இந்த நான்கு படைப்­பி­ரி­வு­களும், இறு­திக்­கட்டப் போரில் பல்­வேறு மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது பொறுப்புக்கூற வேண்டிய படைப்பிரிவுகள்.

இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் பலர் இப்போது இந்தப் படைப்பிரிவுகளில் இல்லை.

ஆனால், அப்­போது பணி­யாற்­றிய படை­யினர் பலர், இன்­னமும் இந்தப் படைப்­பி­ரி­வு­களில் இருக்­கின்­றனர்.

இவர்கள், பொறுப்­புக்­கூ­றலை எதிர்க்­கின்­றனர். ஏனென்றால்,  அது அவர்­களை சிக்­க­லுக்குள் தள்ளும். தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­படும் நிலை­யையும் ஏற்­ப­டுத்தும்.

இதனைக் கருத்தில் கொண்டு கூட, அமெ­ரிக்கத் தூதுவர் சிறு­பான்­மை­யி­னங்கள் மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருக்­கலாம்.

அதன் மூலம் நிலை­யான அமை­தியை எட்ட முடியும் என்று மாத்­திரம் அவர் கூற முன்­வ­ர­வில்லை. அதற்கும் அப்பால், இரா­ணு­வத்­துக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் அமெ­ரிக்கா தயா­ராக இருக்­கி­றது- அதற்­கான தடை­களை அகற்­றுங்கள் என்ற செய்­தியும் இதற்குள் அடங்­கி­யி­ருக்­கி­றது.

பொறுப்­புக்­கூ­றலை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்கும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அமெரிக்கத் தூதுவரின் இந்தச் செய்தி, ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06
news-image

வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பா கண்டம்?

2024-06-16 19:18:28