ஜனாதிபதிக்கு எதிராக பொருளாதார கொள்கையை முன்வைப்போம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

04 Sep, 2023 | 08:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா ? அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா ? என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் வைத்த நம்பிக்கை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

வரி சலுகை வழங்கியது தவறு என்ற குற்றச்சாட்டு எமது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தற்போது வரி விதிப்பு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம்.

எமது கொள்கைகளை ஏற்பதா ?அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

திறந்த மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்தாமல் நடுநிலையான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டதை நாட்டு மக்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:44:14
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-16 15:54:24
news-image

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

2025-01-16 15:48:33
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்...

2025-01-16 15:36:57
news-image

யாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு -...

2025-01-16 16:18:03
news-image

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம்...

2025-01-16 15:24:01
news-image

கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு

2025-01-16 15:26:05
news-image

பாதாள உலக கும்பலின் தலைவரான “பொடி...

2025-01-16 15:04:00
news-image

ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி அறிக்கை...

2025-01-16 15:03:08