கிளிநொச்சி - முகமாலையில் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

Published By: Vishnu

04 Sep, 2023 | 02:32 PM
image

கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த யதீஸ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரு சந்தேகபர்கள் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமாலை பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகபர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை புரட்டாதி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22