இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் எம்மில் சிலர் வெற்றி பெறுவதற்கு கடுமையாக பிரயத்தனம் செய்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு, வளர்ச்சி என்பது இல்லாமல் ஒரே இடத்தில் தேக்கமடைகிறார்கள். இந்நிலையில் அவர்கள், 'யார் விட்ட சாபமோ.. தெரியவில்லை. எம்மாதிரியான முயற்சிகள் மேற்கொண்டும், எங்களால் முன்னேற முடியவில்லை' என மனதளவில் புலம்பத் தொடங்குவர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்.. முதன்மையான காரணமாக ஆன்மீக பெரியோர்கள் முன் வைப்பது பித்ரு சாபத்தை தான்.
அதாவது எம்முடைய முன்னோர்கள் எமக்கு ஆசி வழங்க மறுப்பது தான் இதன் பின்னணி. ஏனெனில் எம்முடைய மூதாதையர்களுக்கு அவர்களின் இறந்த திதியில் சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவை முறையாக செய்யாததால் ஏற்படும் பாவமே பித்ரு சாபமாக மாற்றம் பெறுகிறது. இந்த சாபம் நீங்க எம்முடைய மூதாதையர்கள் இறந்த திதியில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
உடனே எம்மில் சிலர் எம்முடைய மூதாதையர்கள் இறந்த திதி என்னவென்று எங்களுக்குத் தெரியாதே..! நாங்கள் என்ன செய்யலாம்? என வினா எழுப்பவர். இவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய அமாவாசைகளில் திதி தரலாம். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலமே இதிலிருந்து விடுபட இயலும்.
குறிப்பாக உங்களுடைய ஜாதகத்தில் சூரியன் - சனி சேர்ந்து இருந்தாலோ.. அல்லது சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தாலோ.. அல்லது செவ்வாய் இருக்கும் ராசியிலிருந்து நான்காமிடத்தில் சனி இருந்தாலோ.. அவர்களுக்கு முன்னோர்களின் சாபம் இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
இவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு நீர்நிலை அருகில் சென்று திதி, தர்ப்பணம் செய்வது ஒரு வழி என்றால்... இதற்கு மற்றொரு வழியும் உண்டு. அதாவது ஆலய வழிபாட்டு பரிகாரம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தில் திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் சௌந்தர்ய நாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்கு ஆடி அமாவாசை தினத்தன்று சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் அமாவாசை தினத்தில் சென்றாலோ அல்லது உங்களுடைய முன்னோர்கள் இறந்த திதியன்று சென்றாலோ உங்களுடைய அல்லது உங்களை பிடித்திருக்கும் பித்ரு சாபம் நீங்கும்.
இந்த ஆலயத்தில் சிவபெருமான் சுயம்பு பூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இந்த தலத்திற்கு புராண வரலாறுகள் நிறைய உள்ளன. இங்குள்ள கிணற்றில் 13 தீர்த்தங்கள் ஒன்றாக சங்கமித்திருக்கிறது. அந்த தீர்த்தம்.. இந்த ஆலயத்தில் சோமாஸ்கந்தர் மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில் தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் செல்லும் வழக்கமும் அண்மையில் உண்டாகி இருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு சென்று சிவபெருமானையும் சௌந்தர்ய நாயகியை வணங்குவதற்கு முன், இங்குள்ள காசிப தீர்த்தம் எனும் கிணற்றிலிருந்து சிறிதளவு நீரை எடுத்து அதனை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆலயத்தை வலம் வர வேண்டும். இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அருளால் எம்முடைய முன்னோர்களின் சாபம் நீக்கம் பெற்று அவர்கள் மோட்சத்திற்கான பாதை உறுதியாகிறது. அதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து எமக்கு ஆசியினை வழங்குவார்கள். இந்த ஆசியின் காரணமாக எம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த மாயத்தடைகள் அனைத்தும் தூள் தூளாக உடைந்து வளர்ச்சி சாத்தியமாகும்.
ஒரு சிலர் பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு அல்லது பித்ரு சாபத்தை போக்குவதற்கு பெற்றோர்கள் குறிப்பாக தந்தை இல்லாதவராக இருக்க வேண்டும் என சொல்வர். ஆனால் இந்த தலத்தின் சிறப்பே.. உங்களுக்கு பித்ரு தோஷம் இருந்தால்.. உங்களுடைய பெற்றோர்கள் உங்களுடன் இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு சென்றால் அவர்களுக்கும் நற்பேறு கிடைக்கும்.
இதனால் உங்களில் யாருக்கேனும் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் இருந்தால், இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று சுயம்புவாக எழுந்தருளும் சிவபெருமானை மனமுருக பிரார்த்தித்து தரிசித்தால் முன்னேற்றம் உறுதி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM