2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வரை எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது - லிட்ரோ நிறுவனம்

04 Sep, 2023 | 12:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினாலும்,5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவினாலும்,2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3127 ரூபாவாகவும்,5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1256 ரூபாவாகவும்,2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 587 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டதாவது,

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 100 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

உலக  சந்தையின் விலைக்கு அமைய எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலையை குறைந்தபட்சம் 980 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.

கடந்த மாதம் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை.

இந்த மாதம் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்க கூடும் என்பதை உணர்ந்து வழமைக்கு மாறாக மேலதிகமாக எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே விலை அதிகரிப்பை நிறுவன மட்டத்தில் முகாமைத்துவம் செய்துக்கொண்டு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலi 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு காலப்பகுதி வரையான காலப்பகுதியில் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சமையல் எரிவாயுவின் விலை 2000 ரூபா வரை கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36