தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'இறைவன்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஐ. அகமது இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'இறைவன்'. இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரி கே. வேதாந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஸன் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்டத்தில் பதின்ம வயது பெண் பிள்ளைகளை தொடர் கொலை செய்யும் வில்லனை காவல்துறையில் பணியாற்று நாயகன் தேடி கண்டறிந்து கொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்.. இப்படம் ஆக்ஷன் திரில்லர் என்டர்டெய்னரை ரசிக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்டத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற சில திரைப்படங்களின் காட்சிகளும், அம்சங்களும் இடம்பெற்றிருந்தாலும்... பொன்னியின் செல்வனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜெயம் ரவி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இப்படத்தை வெற்றி படமாக அளிப்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM