சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ' ஜெயிலர்' டிஜிட்டல் தள வெளியீட்டு திகதி அறிவிப்பு

04 Sep, 2023 | 12:20 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியன்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் திரையிடப்பட்டு இந்திய மதிப்பில் 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

இதனால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் , கதாநாயகனான ரஜினிகாந்திற்கும், இயக்குநரான நெல்சன் திலீப்குமாருக்கும் காரும், ரொக்கத் தொகைகையும் பரிசாக வழங்கி கௌரவித்திருக்கிறது. 

'ஜெயிலர்' திரைப்படம் பட மாளிகைகளில் வெளியாகி 25 நாட்கள் கடந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 7ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை உருவாக்கி இருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெறும் என அவரது ரசிகர்களும்,  டிஜிட்டல் தள வணிகர்களும் அவதானிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right