மக்கள் வங்கியானது தனது புத்தாக்கமான People’s Mobile Point of Sale (People’s mPOS) தீர்வை பெருமையுடன் அறிமுகப்படுத்துவதுடன், எந்த இடத்திலிருந்தும் அட்டை மூலமான கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறு மற்றும் நுண்-நிலை வணிகங்களுக்கு வலுவூட்டுகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன், வணிகர்கள் இப்போது தமது mPOS சாதனத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தலாம் என்பதுடன், இது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தையும், நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.
People’s mPOS தீர்வு குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் நுண்-நிலை வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வணிகர்களுக்கு விசா (Visa), மாஸ்டர்கார்டு (MasterCard) மற்றும் லங்கா பே ஜேசிபி அட்டைகளை (Lanka Pay JCB) ஏற்றுக்கொள்ள இடமளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான கொடுப்பனவுத் தெரிவுகளை உறுதி செய்கிறது.
People’s mPOS ஐப் பயன்படுத்துவதன் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று பாரம்பரிய அட்டை முனையங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த தள்ளுபடிஃதரகுப்பண வீதமாகும்.
வணிகர்கள் இந்த கொடுப்பனவு ஏற்புத் தீர்வை குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் சிரமமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும், People’s mPOS தீர்வு மேம்படுத்தப்பட்ட இயங்குதிறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதால், வணிகர்கள் எங்கிருந்தும், எவ்வேளையிலும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள இடமளிக்கும்.
People's Bank mPOS இன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, 75கிராம் எடை மற்றும் பரிமாணங்கள் (நீ ஒ அ ஒ உ) - 89.7மிமி ஒ 59 மிமி ஒ 14.8மிமி உடன் சிறிய மற்றும் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய சாதனமாக உள்ளமையால், வணிகர்கள் சிரமமின்றி எடுத்துச் செல்ல இடமளிக்கிறது.
சாதனம் மீள்மின்னேற்றம் (சார்ஜ்) செய்யப்படக்கூடிய மின்கலம் (பேட்டரி) பொருத்தப்பட்டுள்ளதுடன், இது தங்குதடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும், தானியங்கு தீர்வு அம்சமானது, அடுத்த அலுவலக நாளில் வணிகரின் கணக்கில் நிதி வரவு வைக்கப்படுவதை உறுதிசெய்கிறதுடன், இது நிதி செயல்முறையை சீராக்குகிறது.
People's mPOS ஆனது ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் Wi-Fi மற்றும் SIM இணைப்புடன் செயல்படுவதுடன், இது நம்பகமான மற்றும் தங்குதடையற்ற தகவல்தொடர்பாடலை உறுதி செய்கிறது.
வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் ரசீதுகளை உருவாக்கி, ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தலாம் என்பதால், பல்வேறு தேவைகள் கொண்ட வணிகங்களுக்கு ஏற்றதாக இதனை ஆக்குகிறது. மேலும், People's mPOS சாதனம் அதிநவீன பாதுகாப்புத் தராதரங்களுடன் உள்ளிணைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், இது அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதுடன், முக்கியமாக அட்டைதாரர் தரவைப் பேணிப் பாதுகாக்கிறது.
People’s mPOS தீர்வுக்கு விண்ணப்பிப்பது ஒரு இலகுவான நேரடி செயல்முறையாகும். ஆர்வமுள்ள வணிகர்கள் mPOS விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, தங்கள் தேசிய அடையாள அட்டையின் சான்றுபடுத்தப்பட்ட பிரதியை வழங்க வேண்டும். மேலும், சாதனத்திற்கான கட்டண ரசீதும் தேவை. மாதாந்த இலக்கு சேவை கட்டணங்கள் அல்லது பொறுப்புகள் எதுவும் கிடையாது ஆகையால், இது ஒரு நெகிழ்வான மற்றும் செலவு குறைந்த தீர்வாக அமைகிறது.
நீங்கள் சாதனத்தை வாங்கியவுடன் அது வணிகருக்குச் சொந்தமான சொத்தாக மாறுகிறது. உள்ளிணைப்புச் செயல்முறையுடன் வணிகர்களுக்கு உதவ, மக்கள் வங்கி ஒவ்வொரு படிக்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிபுணத்துவத்தின் துணையுடன், தங்களுடைய தற்போதைய கட்டமைப்புகளில் அPழுளு சாதனத்தை தங்குதடையின்றி ஒருங்கிணைக்க முடியும்.
முன்னணி mPOS தீர்வு வழங்குநராக, Payable Pvt Ltd ஆனது, இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக மக்கள் வங்கியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. தனது நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை-முன்னணி சேவைகள் மூலம், Payable Pvt Ltd ஆனது தங்குதடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் வணிகர்களுக்கான பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது.
People’s mPOS விண்ணப்பங்கள் எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும், அட்டை மையத்திலும் கிடைக்கின்றன அல்லது www.peoplesbank.lk/merchant-services இல் மக்கள் வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். மற்றும்People’s mPOS சாதனமானது சேவை வழங்குநரால் வணிகரின் இடத்திற்கே நேரடியாக விநியோகம் செய்து வழங்கப்படும்.
People’s mPOS தயாரிப்பு சலுகைகள் பற்றிய கூடுதல் விபரங்களைப் பெற வாடிக்கையாளர்கள் 1961 ஊடாக மக்கள் வங்கிகளின் அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM