சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வை கருத்தில் கொண்டு நாட்டில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM