வயம்ப பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர்  மூன்று மாணவர்களை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.