பெருமளவான பார்வையாளர்களை உள்ளீர்த்த Ceylon Motor Show 2017

Published By: Priyatharshan

08 Feb, 2017 | 12:51 PM
image

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Ceylon Motor Show 2017 நிகழ்வை பார்வையிட, பெருந்திரளான வாகன ஆர்வலர்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தனர்.

இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் மற்றும் பிந்திய மோட்டார் வாகனத்துறையுடன் தொடர்புடைய கண்காட்சியாக இது அமைந்துள்ளதுடன்ர 1900 களின் பழமையான கார்களையும் காட்சிப்படுத்தியிருந்தது.

23000க்கும் அதிகமான பார்வையாளர்களை மூன்றாம் நாளின் இறுதியில் பதிவு செய்திருந்த இந்த கண்காட்சி, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஜயம் செய்தவ பார்வையாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருந்தது. 

Ceylon Motor Show 2017 என்பது 60க்கும் அதிகமான வர்த்தக நாமங்களை 25 வர்த்தக நாம உரிமையாளர்களினால் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்காக பார்வையாளர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு பதிவாகியிருந்ததுடன், புகழ்பெற்ற வாகனங்களான, கார்கள், SUV கள் ட்ரக் வகைகள், பஸ் வகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் இலங்கையில் காணப்படும் சில சக்தி வாய்ந்த வாகனங்களின் சாரதி ஆசனத்தில் ஏறி அமர்ந்து அந்த அனுபவத்தை பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.

துறையின் பிந்திய வாகனத் தெரிவுகளில் 130 க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் நவீன கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன் போது இந்த பாரம்பரிய கார்களை தற்போதும் பராமரிப்பது எவ்வாறு என்பது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

“Ceylon Motor Show 2017 க்கு எமக்கு ஒப்பற்ற மற்றும் பெருமளவு வரவேற்பு பொது மக்கள் மற்றும் எமது பிரதான அனுசரணையாளர் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ், இலத்திரனியல் ஊடக பங்காளர் மற்றும் வெளியக பங்காளர்கள் ஆகியோரிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக திகழச் செய்ய ஒன்றிணைந்திருந்தனர்.”

“எமக்கு கிடைத்திருந்த வரவேற்பு என்பது எமது ஏற்பாட்டு அணியினருக்கு பெருமளவு ஊக்குவிப்பை வழங்குவதாக அமைந்திருந்தது. இந்த ஆண்டு Ceylon Motor Show கண்காட்சி தொடர்பில் அதன் தரம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து பல விருந்தினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

பலர் சர்வதேச தரம் வாய்ந்ததாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த ஆண்டு கண்காட்சி என்பது, எதிர்கால நிகழ்வுகளுக்கு நியமத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்” என சிலோன் மோட்டார் வாகன விற்பனையாளர் சம்மேளனத்தின் தலைவர். ரீஸா ரவுஃவ் தெரிவித்தார். மேலும் மூன்று புதிய வாகனத் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இதில் உயர் தரம் வாய்ந்த விளையாட்டு கார்கள் கள் மற்றும் Hatchbacks போன்றன இலங்கை சந்தையில் இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை பாரம்பரிய கார் கழகம் ஆகியவற்றின் பங்காண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ் வழங்கியிருந்தது. இலங்கையில் காணப்படும் ஒரே மாபெரும் வாகன கண்காட்சி நிகழ்வாக Ceylon Motor Show அமைந்துள்ளது.

இலங்கை பாரம்பரிய கார்கள் கழகத்தின் தலைவர் திருமதி. ரமணி பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டின் நிகழ்வு மாபெரும் வெற்றியை வழங்கியிருந்தது. எமக்கு கிடைத்த வரவேற்பையும் ஆதரவையும் இட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது அங்கத்தவர்கள், ஏற்பாட்டாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள நிகழ்வு மாபெரும் வெற்றியை வழங்குவதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58