(நா.தனுஜா)
பங்களாதேஷ் வங்கியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனில் இலங்கை அரசாங்கம் இரண்டாம் தவணைக்கொடுப்பனவாக 100 மில்லியன் டொலரை மீளச்செலுத்தியுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் தவணைக்கொடுப்பனவாக 50 மில்லியன் டொலரை பங்களாதேஷுக்கு மீளச்செலுத்தியிருந்தது.
இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்த வேண்டியிருந்த போதிலும், சுமார் 51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் (வங்குரோத்து நிலை) இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.
அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் மார்ச் மாதம் கடனை மீளச்செலுத்தமுடியாத நிலையில், மேலும் 6 மாத கால அவகாசத்தைக் கோரிய இலங்கை, முதற்கட்டமாக ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக செப்டெம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக உறுதியளித்தது. அதனையடுத்து அக்கடனை மீளச்செலுத்துவதற்கு பங்களாதேஷ் மேலும் 6 மாதங்கள் கால அவகாசத்தை வழங்கியது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஏற்கனவே வாக்குறுதி அளித்ததைப்போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 50 மில்லியன் டொலரையும், செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் 100 மில்லியன் டொலரையும் பங்களாதேஷ் வங்கிக்கு இலங்கை மீளச்செலுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM