மட்டக்களப்பு ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் இருந்து ஆயித்தியமலை தூய சகாயமாதா தேவாலயத்துக்கான பாத யாத்திரை இன்று சனிக்கிழமை (02) காலை 5 மணிக்கு ஆரம்பமானது.
இந்த பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஆயித்தியமலை தூய சகாயமாதா தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வருடாவருடம் மக்கள் தமது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பாத யாத்திரையாக தேவாலயத்துக்கு செல்வதுடன், மட்டக்களப்பு ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவச் சிலையை எடுத்துச்செல்வது வழமையானது.
அந்த வகையில், இன்று மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஆயித்தியமலை பிரதேசத்தில் அமைந்துள்ள தூய சகாயமாதா தேவாலயத்துக்கு மாதாவின் சிலை எடுத்துச் சென்று, அங்கு வைக்கப்பட்டு விசேட ஆராதனை இடம்பெற்றது.
இதில் அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களைச் சேர்ந்த தேவாலய பங்குத் தந்தைகள், அருட்சகோதரிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM