இன்றைய சூழ்நிலையில் எம்மில் பலருக்கு வீடு, அலுவலகம், பொதுவெளி என பலதரப்பட்ட நிலவியல் பகுதிகளில் இயங்கும் போது எதிர்பாராத விதமாக சிறிய அளவிலான காயங்களும், விபத்துகளும் அடிக்கடி நிகழும். அதாவது இல்லத்தரசிகள் சமையலறையில் பணியாற்றும்போது எதிர்பாராத விதமாக இடித்துக் கொள்வது தடுக்கி கீழே விழுவது என பல எதிர்பாராத அசௌகரியங்களை எதிர்கொள்ள கூடும். இவர்கள் இதன் போது தங்களுடைய கவனமின்மையை தான் காரணம் கூறுவார்கள். ஆனால் இது நவகிரகங்களால் உண்டாக்கப்படும் மாயத்தடை.
அதே தருணத்தில் எம்மில் பலரும் தற்போது வீடு வாடகைக்கு அல்லது போக்கியத்திற்கு எடுத்து கொடுக்கும் இடைத்தரகராக செயல்படுகிறார்கள். கடந்த காலங்களில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த தொழிலில் தற்போது ஏராளமான பெண்மணிகளும் ஈடுபடுகிறார்கள். இந்த தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால்... செவ்வாய் பகவானின் பரிபூரண ஆசியும் அருளும் வேண்டும். நிலம் தொடர்பான விடயங்களுக்கு அதிபதியான செவ்வாயின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெயை பரிகாரமாக பயன்படுத்த வேண்டும்.
அதாவது கடுகு எண்ணெயை செவ்வாய்க்கிழமைகளில் காலை வேளைகளில் பயன்படுத்தி, தலை குளித்தால் உங்களுக்கு செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். அத்துடன் எதிர்பாராமல் நடக்கும் நடைபெறும் விபத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் இடைத்தரகராக பணியாற்றுபவர்களுக்கு தொழில் சார்ந்த பலன், இயல்பான அளவைவிட கூடுதலாக கிடைக்கும்.
கடுகு எண்ணெயால் தலை குளிப்பது ஒரு பரிகாரமா என்று ஒரு பிரிவினரும், எண்ணெய் குளியல் என்பது சனிக்கிழமைகளில் மட்டும் தானே மேற்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் எப்படி மேற்கொள்வது என மற்றொரு பிரிவினரும் சந்தேகங்களை வினாக்களாக கேட்பர்.
செவ்வாய்க்கிழமைகளில் கடுகு எண்ணெயால் தலை குளிக்கலாம். வேறு கிழமைகளில் கடுகு எண்ணெயால் தலை குளிக்கக்கூடாது. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் மூலமாக தலை குளிப்பது தான் சிறந்தது. இதனால் எந்தவித குழப்பமும் தேவையில்லை. செவ்வாய் கிழமைகளில் கடுகு எண்ணெயை தேய்த்து குளித்து ஆபத்திலிருந்தும், விபத்திலிருந்தும் எம்மை நாம் தற்காத்துக்கொள்வோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM