வவுனியா உளுக்குளம், அலியாப்பிட்டடிய சந்திப் பகுதியில் நேற்று (07) அதிகாலை ஒரு மணியளவில் புதையல் தோண்டிய 4 பேரை ஈரப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள்  38, 42, 59 மற்றும்  44 வயதுடைய ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவர்களிடமிருந்து கார் ஒன்றும் நிலத்தில் புதையல் கண்டுபிடிக்கும் ஸ்கேனர் சாதனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.