'ஜவான்' நாயகனை வியக்க வைத்த 'லியோ' நடிகர்

01 Sep, 2023 | 02:47 PM
image

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'விக்ரம்' , கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஜாஃபர் சாதிக். 

இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாக இருக்கும் 'ஜவான்' படத்திலும், தளபதி விஜய் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'லியோ' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பங்கு பற்றி விழா நாயகனான ஷாருக்கான் வியக்க வைத்தார்.

நாலடியார் போல் நான்கடி உயரத்தில் இருந்தாலும் இவரது வில்லத்தனமான நடிப்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் பாராட்டை பெற்றது. அடிப்படையில் நடன கலைஞரான இவர் சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் திடீரென்று மேடையில் தோன்றி 'ஜவான்' பட பாடலுக்கு மட்டுமல்லாமல் வேறு பாடல்களுக்கும் நடனமாடி.. அவர்  பார்வையாளர்களின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜவான் நாயகன் ஷாருக்கானை மேடைக்கு அழைத்துச் சென்று நடனமாட வைத்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அந்நிகழ்ச்சியில் இவரைப் பற்றி ஷாருக்கான் தன்னுடைய பேச்சில் 'திறமைசாலி' என்று குறிப்பிட்டு பாராட்டியது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. இதனிடையே நடிகர் ஜாஃபர் சாதிக் அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right