தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதான பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது

Published By: Ponmalar

08 Feb, 2017 | 10:32 AM
image

தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கின்றது.

தம்புள்ளை மைதானத்தின் 11 பணியாளர்கள் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி நின்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் நேற்று (07) ஆரம்பித்திருந்தனர்.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவாறு தங்களை நிரந்தர பணியாளர்களாக்கும் பட்சத்திலேயே, ஆர்ப்பாட்டம் கைவிடப்படும் எனவும் அவர்கள் நேற்று தெரிவித்திருந்தனர்.

குறித்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்குவதற்கு கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right