வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென முன் அறிவித்தல் ஏதும் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் நேற்றும் வவுனியாவில் பல இடங்களில் திடீரென நிறுத்தப்பட்ட மின்சாரம் பிற்பகல் வேளை வரை வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நகரத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் இச் செயற்பாட்டினால்  பொதுமக்கள் மிவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடைகுறித்து முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.