சந்திரனின் தென்துருவத்தில் கந்தகம் : சந்திரயானின் பிரக்யான் ஊர்தி உறுதிப்படுத்தியது

Published By: Sethu

01 Sep, 2023 | 09:44 AM
image

சந்திரனின் தென் துருவப் பகுதியில் கந்தகம் இருப்பதை சந்திரயானின் பிரக்யான்  ஊர்தி உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஒட்சிசன் மூலகங்களையும் பிரக்யான் கண்டறிந்துள்ளது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்தது.

விக்ரம் லேண்டருக்குள்ளிருந்து வெளியேறிய பிரக்யான் தரையூர்தி (ரோவர்) சந்திரனின் தரையில் உலாவித் திரிந்து, ஆய்வுத் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரக்யான் ஊர்தியிலுள்ள லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) எனும் கருவியின் தரவுகள், சந்திரன் மேற்பரப்பில் கந்தகம் உள்ளதை  உறுதிப்படுத்தியுள்ளன என செவ்வாய்க்கிழமை (29) வெளியிடப்பட்ட அறிக்கையில் இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரக்யான் ஊர்தி  

'சந்திரனின் தென் துருவத்தின் தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது அளவீடுகள் இதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தியுள்ளன. சந்திரனை சுற்றி விண்ணில் வலம்வரும் ஒரு சுற்றுக்கலத்தினால் (ஓர்பிட்டர்) ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் அளவீடுகளால் இதை உறுதிப்படுத்துவது சாத்தியமானதல்ல’ என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அத்துடன், அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஒட்சிசன் மூலகங்களையும்  அக்கருவி கண்டறிந்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஐதரசனை தேடும் நடடிக்கை பிரக்யானின் நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் வளிமண்டலம் மற்றும் நில அதிர்வுகளையும் பிரக்யான் ஆய்வு செய்யும் என இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

விக்ரமை படம்பிடித்த பிரக்யான்

விக்ரம் லேண்டரை பிரக்யான் ஊர்தி பிடித்த முதலாவது புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

விக்ரம் லேண்டர் சந்திரனில் 23 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.04  மணிக்கு தரையிறங்கியது.  அதன்பின் சுமார் ஒரு வாரம் கடந்த நிலையில்,  புதன்கிழமை (30) காலை 7.35 மணிக்கு விக்ரமை முதல் தடவையாக பிரக்யான் படம்பிடித்துள்ளது.  சிவசக்தி முனை எனப் பெயரிடப்பட்டுள்ள இடத்தில், நிறுத்தப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டர் அப்படத்தில் காணப்படுகிறது.

விக்ரம் லேண்டரிலுள்ள, 4 கருவிகளில், சந்திரனின் வெப்பத்தை அளக்கும் சேஸ்ட் (ChaSTE), நிலநடுக்கத்தை ஆய்செய்யும் இல்சா (ILSA) ஆகிய கருவிகளும் அப்படத்தில் காணப்படுகின்றன.

பிரக்யான் பிடித்த படத்தில் விக்ரம் லேண்டர்.

தென் துருவத்தின் வெப்பநிலை

இதேவேளை, சந்திரனின் தென்துருவத்தல் மேற்பரப்பில் அசாதாரணமான அளவுகளில் வெப்பநிலைகள் உள்ளதை விக்ரம் லேண்டரின் சேஸ்ட் கருவியின் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட வரைபின்படி, சந்திரனின் தரையில் 50 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உள்ளது. தரையிலிருந்து 2 சென்ரிமீற்றர் உயரத்தில் வெப்பநிலை 60 பாகை செல்சியஸாக உள்ளது. அதேவேளை, 8 சென்ரிமீற்றர் ஆழத்தில் வெப்பநிலையானது மைனஸ் 10 பாகை செல்சியஸ் அளவுக்கு குறைந்தநிலையில் உள்ளது.

மெதுவான பயணம்

பிரக்யான் ஊர்தியானது ஒரு விநாடிக்கு (செக்கன்) 10 சென்ரிமீற்றர் (மணித்தியாலத்துக்கு 360 மீற்றர்) எனும் வேகத்திலேயே சந்திரனில் உலாவுகிறது. சந்திரனின் கடினமான தரையில் பயணிக்கும்போது இவ்வாகனத்துக்கு  ஏற்படக்கூடிய அதிர்ச்சி மற்றும் சேதங்களைக் குறைப்பதற்காகவே இவ்வாறு மெதுவாக  அதுபயணிக்கிறது.

கடந்த திங்கட்கிழமை  4 மீற்றர் (13 அடி) பள்ளமொன்றின் அருகில் பிரக்யான் சென்ற நிலையில், அதன் பாதை மாற்றப்பட்டது.

சந்திரனில் தரையிறங்கியதிலிருந்து 14 நாட்களுக்கு பிரக்யானின் ஆய்வுகள் நீடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  (சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48