மேஷம்
உண்மையும், உறுதியும் கொண்டு செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், ராசியில் குரு அமர்ந்து பார்ப்பதும் சிறந்த பலனைப் பெற்று தரும். எதிர்காலத்தை பற்றிய பயம் நீங்கி, சுபீட்சம் பெற்று தொழிலில் வளம் பெறுவீர்கள். உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து பண வரவுகளை சிறப்பாக அமைத்து தருவார். தொழில் ஸ்தானத்தில் சனி வக்கிரம் பெறுவதால், உங்களின் தொழிலில் பணியாளர்களின் பிரச்சினையின்றி நன்மை அடைவீர்கள். ஆடம்பரமில்லாத வாழ்க்கை சூழ்நிலைகளை அமைத்துக்கொள்வீர்கள். நான்காமிடத்தில் சுக்கிரன் அமர்ந்து வாகன வசதியை ஏற்படுத்தி தருவார்.
சந்திராஷ்டம நாட்கள்: 20.09.2023 புதன் காலை 07.14 முதல் 22.09.2023 வெள்ளி பகல் 12.39 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து, மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.
ரிஷபம்
சாதிக்க நினைத்ததை செயற்படுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றில் வக்கிரம் பெறுவதும், சனி பார்வையும் தொழிலில் நல்ல லாபம் தரும் சூழ்நிலையை உருவாக்கும். விரைய குரு திடீர் செலவுகளையும், ஆடம்பர பொருட்களை வாங்கும் நிலையையும் உண்டாகும். உங்களின் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்வதால் சுய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வளர்ச்சியை பெற சந்தர்ப்பம் அமையும். அதனை ஈகோ இன்றி ஏற்றுக்கொண்டால், முன்னேற்றம் காண்பீர்கள். சரியான நேரத்தில் காரியத்தை செயற்படுத்தி நன்மை பெறுவீர்கள். அரசியல் தலைமையுடனான நட்பு சிலருக்கு அமையும். பணம் புரளும்.
சந்திராஷ்டம நாட்கள்: 22.09.2023 வெள்ளி பகல் 12.40 முதல் 24.09.2023 ஞாயிறு மாலை 04.18 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு,
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் தடையின்றி வளம் பெறும்.
மிதுனம்
காலத்தையும் செயலையும் வீணாக்காத மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் நீங்கள் எடுக்கும் காரியங்களுக்கு குரு பக்கபலமாக இருந்து நன்மையை தருவார். திரும்ப திரும்ப எதையும் செய்வதை விருப்பமாட்டீர்கள். எதை எடுத்தாலும் உடனே செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களின் சுய முயற்சிகளுக்கு சிறந்த பலன்கள் உண்டாகும். இதுவரை தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பல காரியங்களிலும் காரணம் தேடாமல் உடனே செய்து முடிப்பீர்கள். அறிவியலில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்திலிருந்து வந்த பல குழப்பங்கள் சீராகும். தொழிலிலும் உத்தியோகத்திலும் ஏற்பட்ட இழப்புகள் சரியாகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சரியாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: 24.09.2023 ஞாயிறு மாலை 04.17 முதல் 26.09.2023 செவ்வாய் மாலை 06.50 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் சகல காரியமும் சிறப்பாக அடையும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.
கடகம்
காலத்தையும் சூழ்நிலையையும் கணித்து செயற்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெறும். வக்கிர சனி பார்வை படுவதும் தனஸ்தானத்தை குரு பார்ப்பதும் உங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வருமானத்தை பெற்றுத்தரும். அரசியலில் சிலருக்கு பதவிகளும் பொறுப்புகளும் அமையப் பெறும். திறமையுடன் செயற்பட்டு உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். எண்ணமும் செயலும் ஒருநிலைப்படும்படி, காரியம் செய்வீர்கள். உங்களுக்கு அட்டம சனி காலமாக இருந்தாலும், சனி வக்கிர கதியில் ஏழாமிடத்தில் அமைவதால் வெளிநாடு செல்ல தடை இருந்த நிலை மாறி, மேன்மை பெறுவீர்கள். சிலர் முரண்பட்ட விடயங்களில் தீர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 26.09.2023 செவ்வாய் மாலை 06.51 முதல் 28.09.2023 வியாழன் இரவு 09.13 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: திங்கட்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு கலந்த அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் சிறப்பாக அமையும்.
சிம்மம்
மென்மையாக எதையும் பேசி, திறமையாக செயற்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் ஆட்சி பெற்று தன லாபாதிபதி சம்பந்தம் பெறுவதும் குரு பார்வை பெறுவதும் உங்களின் பல நாள் லட்சிய கனவுகள் நல்ல பலனைப் பெற்றுத் தரும். தனி திறமை கொண்டு செயற்படும் உங்களின் ஆர்வமும், செயலின் உத்வேகமும் உங்களுக்கு மென்மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். சரியான முன்னேற்பாடுகளை செய்து ஒவ்வொரு காரியத்தையும் செயற்படுத்துவீர்கள். உங்களின் பல நாள் எதிரி, உங்களை சந்தித்து உறவுகொள்வார். எதை செய்தாலும் நல்ல நண்பர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களுக்கு பயன்படும். அரசியலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாடு சென்று வரும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு தீர்த்த யாத்திரை சென்று வருதல், தெய்வ சந்நிதிகளின் வழிபாடுகளுக்கு சென்று வருதல் போன்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 01.09.2023 வெள்ளி பகல் 01.12 முதல் 03.09.2023 ஞாயிறு மாலை 04.25 மணி வரை மற்றும் 28.09.2023 வியாழன் இரவு 09.14 முதல் 30.09.2023 சனி இரவு 12.18 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
தடையில்லா செயற்பாடுகளை ஊக்குவித்து செயற்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு பார்வை பெறுவதால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களின் ராசிநாதன் மறைந்தாலும் நற்பலன்களை தருவார். பாதகாதிபதி குரு அட்டம ஸ்தானத்தில் மறைவது உங்களுக்கு நற்பலனையே தரும். ராஜதந்திரமான காரியங்களில் ஈடுபட்டு, வெற்றி பெறுவீர்கள். பொறுப்புகளையும் பணிகளையும் கவனித்து செயற்படும் சூழ்நிலை உருவாகும். அரசியலிலும் பொது விடயத்திலும் எண்ணியபடி எல்லாம் சிறப்பாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டிவரும். புதிய செலவுகளால் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் திறமையும் தன்னம்பிக்கையும் பெற்று, சுய முயற்சியாலும் நல்ல நண்பர்களின் உதவியாலும் முன்னேறுவர். வெளிப்புற கலைஞர்களுக்கு விரைவில் காரிய சித்தியும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கப் பெறும். பொருளாதார விடயங்களில் வளம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 03.09.2023 ஞாயிறு மாலை 04.20 முதல் 05.09.2023 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணி வரையும்.
30.09.2023 சனி இரவு 12.19 முதல் 03.10.2023 செவ்வாய் அதிகாலை 04.56 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், மஞ்சள்
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: மருதோன்றி வேரினை உலர வைத்து, காய்ந்த விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வர, உங்களின் அனைத்து கஷ்டங்களும் முழுமையாக நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.
துலாம்
திறமையும் மனவலிமையும் கொண்டு விளங்கும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் நான்காமிடத்தை வக்கிர கதியில் பார்ப்பதும், தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழில் சார்ந்த காரியத்தை சிறப்பிக்கும். மேற்கல்வி பயில முயற்சி எடுக்கும் மாணவர்களுக்கு விரைவில் சாதகமான பலன் அமையும். உங்களை மதித்து நடப்பவர்களுக்கு உங்களால் முடிந்த காரியங்களை சிறப்பாக செயற்படுத்துவீர்கள். கலைத்துறையினர் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். எதற்கும் முன்கூட்டியே யோசித்து செயற்படுவீர்கள். உங்களின் புத்திரஸ்தானாதிபதி சனி உங்களின் ராசியை இப்பொழுது பார்ப்பது புத்திரரின் வேலை சார்ந்த பணிகளை சிறப்பாக்கும். அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வீர்கள். எதிலும் அமைதி, பொறுமை கொண்டு செயற்படுவீர்கள். உடல்நல குறைபாடுகள் வந்து சரியாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: 05.09.2023 செவ்வாய் இரவு 09.19 முதல் 08.09.2023 வெள்ளி அதிகாலை 04.25 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு மிளகு அன்னம் வைத்து வழிபட தடைகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விடாமுயற்சியும் செயல்திறனும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம், ஆறாமிடத்தை பார்வையிடுவதும், தனஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் அன்றாட செயல்களை திட்டமிட்டபடி நடத்திவைக்கும். உங்களின் தொடர் முயற்சிகள் உங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். புதிய நண்பர்களின் வரவு உங்களுக்கு புதிய தகவல்களை பெற்றுத் தரும். தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தபடி நீங்கள் உங்களின் செயற்பாடுகளில் நல்ல யோசனைகளையும் வளம் பெறச் செய்யும். கலைத்துறையில் சிலருக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உதவியுடன் சிலர் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உடல்நலனில் கவனம் செலுத்தி பொன், பொருள் இழப்பு ஏற்படாமல் நிதானமாக செயற்படுவதும், பதற்றமின்றி இருப்பதும் நன்மையை தரும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க தேவையற்றவற்றில் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: 08.09.2023 வெள்ளி அதிகாலை 04.26 முதல் 10.09.2023 ஞாயிறு பகல் 02.07 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்சு, வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தொடர்ந்து வழிபட்டு வர, காரியத்தில் திறம்பட செயற்பட்டு வெற்றி காண்பீர்கள்.
தனுசு
மாற்றத்தையும் வித்தியாசத்தையும் விரும்பும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறுவது நற்பலனை பெற்றுத் தரும். லாபாதிபதி தனஸ்தானத்தை பார்ப்பதும், தனாதிபதி சனி வக்கிரம் பெற்று லாபாதிபதியை பார்ப்பதும், உங்களின் தொழிலிலும் உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். தொழிலில் பல வழிகளில் இடையூறுகளாக இருந்தவர்கள் விட்டு விலகி வேறிடத்துக்கு சென்றுவிடுவார்கள். புதிய நண்பர் மூலம் சில காரியத்தில் ஈடுபாடு கொண்டு வெற்றியை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். தொழிலில் முன்பை விட வளர்ச்சியை உருவாக்குவீர்கள். பாதுகாப்பான நல்ல பயணம் உண்டாகும். வங்கிக்கடன் மூலம் மேன்மை பெறுவீர்கள். தொழிலில் அக்கறை கொண்டு வருமானத்தை ஈட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 10.09.2023 ஞாயிறு பகல் 02.08 முதல் 12.09.2023 செவ்வாய் இரவு 01.28 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், பல வர்ணங்கள்
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனுக்கு தேசிக்காய் தோலில் நெய் ஊற்றி தீபமிட்டு வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியங்களும் அனுகூலமாகும்.
மகரம்
தனக்கு கொடுத்த செயலை சரியாக செய்து முடிக்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசிக்கு வக்கிரமாகி அமர்வதும், யோகாதிபதி சுக்கிரன் வக்கிரகதியில் ராசியை பார்ப்பதும் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட நிலை உண்டாகும். எதிர்பார்த்து இருந்த காரியத்தை விட எதிர்பாராத விடயங்கள் சிறப்பாக அமைவது சிறப்பு. முக்கிய செயல்களில் உங்களின் ஈடுபாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும். அதிக பணிகளிலிருந்து விடுபட்டு, சிறந்த மேன்மையை அடைவீர்கள். எதற்கும் உங்களின் பங்கு எதிர்கால நலனுக்காகவும், வாழ்க்கை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் இருக்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். தன் நலனை காட்டிலும் பிறரின் நலனுக்கு தகுந்தபடி உங்களின் முயற்சிகள் இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 12.09.2023 செவ்வாய் இரவு 01.29 முதல் 15.09.2023 வெள்ளி பகல் 01.04 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, பல வர்ணங்கள்
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு தீபமிட்டு துவரை சாதம் வைத்து வணங்கி வர நீங்கள் எதிர்பார்த்த சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
கும்பம்
பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஏழாமிடத்து அதிபதி ஆட்சி பெற்று பஞ்சமாதிபதியுடன் சம்பந்தம் பெறுவதும் குரு பார்வை பெறுவதும் சிறப்பான பலனை பெற்றுத் தரும். நீண்ட நாட்கள் காதலித்து, அதனை காதலரிடம் சொல்ல முடியாமல் இருந்தவர்களின் காதல் நிறைவேறவும், காதலித்துக்கொண்டிருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் இது சரியான காலமாக அமையும். அரசியலில் தனித்துவத்துடன் செயற்படுவீர்கள். பதவிக்கு உங்களை முன்மொழிவு செய்ய வாய்ப்பு அமையும். கலைத்துறையினருக்கு வெளிநாடு, வெளியூர் சென்று வரும் வாய்ப்புகள் அமையும். முதலீடு இல்லாத கமிஷன் தொழில் சிறப்பாக அமையும். எதிர்ப்புகள் குறைந்து மேன்மை பெறுவீர்கள். யாரையும் நம்பியிருக்காமல் நீங்களே எதையும் துணிவுடன் செய்வீர்கள். பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 15.09.2023 வெள்ளி பகல் 01.05 முதல் 17.09.2023 ஞாயிறு இரவு 11.19 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமும், சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர நன்மை உண்டாகும்.
மீனம்
நினைத்ததை அடைய எந்த முயற்சியையும் செய்யும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதன் குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களின் தடைபட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். அடைபடாமல் இருந்த பல கடன் தொல்லைகள் மறையும். இனந்தெரியாத பல வழக்குகளில் விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் சனி வக்கிரம் பெறுவதும், முயற்சி ஸ்தானாதிபதி சுக்கிரன் வக்கிரமாகி சனியை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட சூழ்நிலைகள் அமையும். ஆன்மிக சுற்றுப்பயணம் செய்தல், சமூக சேவை செய்தல், ஆன்மிக தொண்டுகள் செய்தல் போன்ற பல வளர்ச்சி நிலைகளை அடைவீர்கள். எதையும் சரியான நேரத்தில் செய்து நன்மை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியுடன் பொருளாதார மேன்மையும் அடைவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 17.09.2023 ஞாயிறு இரவு 11.20 முதல் 20.09.2023 புதன் காலை 07.13 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, வெள்ளை நிறம் மற்றும் மஞ்சள் நிற பூவை வைத்து, நெய் தீபமேற்றி வணங்கி வர, சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM