நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமும் நன்மதிப்பு பெற்ற வன் வேர்ல்ட் உறுப்பினருமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஊக்குவிப்பாளர் என்ற வகையில்‘The Colours of Jaffna.’ (‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’) என்ற தனது அண்மைய ஊக்குவிப்புப் பிரச்சார திட்டத்தை ஆரம்பித்தது.
அற்புதமான கட்டடக்கலை, மனதை ஈர்க்கும் கலாசார அம்சங்கள் மற்றும் அதன் தனித்துவமான சமையல் அம்சங்களின் மிகச்சிறந்த சுவைகள் போன்ற பல்வேறு துறைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நாட்டின் வட பகுதியில் உள்ள சாத்திய வளங்களை கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் பிரச்சார திட்டத்தில், இந்த ஒவ்வொரு அம்சத்தின் அழகையும் மிகப் பொருத்தமான முறையில் வெளிக்கொணர்ந்து, பயணிகளை மிகப்பரந்த அனுபவத்தை நோக்கி அழைக்கிறது.
தற்போது இடம்பெற்று வரும் சுமார் 20 - 25 நாட்கள் நடைபெறும் தேசிய விழாவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் தேர்த் திருவிழாவை மையமாகக் கொண்டு, யாழ்ப்பாண நகரத்துக்கு வருகை தந்து, நகரத்தை அதன் புகழ்பெற்ற துடிப்பான வடிவத்தில் கண்டுகளிக்க இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸானது யாழ்ப்பாணத்தின் எழில்மிகு அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு மனதுக்கினிய காணொளியுடன் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இது தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் வேடிக்கையான வினா விடை நிகழ்வுகளை உள்ளடக்கிய விதத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு கண்கவர் இடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவான ஸ்ரீலங்கன் ஹொலிடேஸ், அதன் பிரத்தியேக உபசரிப்புப் பங்காளரான ஜெட்விங் ஹோட்டல்களை கொண்டு யாழ்ப்பாணத்தின் சிறந்த பகுதிகளை உள்ளடக்கிய தொடர் விடுமுறைப் பொதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரச்சார திட்டத்தின் அடுத்த கட்டமாக உள்ளடக்கத்தை வடிவமைப்பவர்கள் மற்றும் சமூக செல்வாக்கு செலுத்துபவர்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்று அங்குள்ள பல்வேறு விடயங்களின் அனுபவங்களை தங்களது இரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களையும் அதற்கு ஊக்குவிப்பார்கள்.
இலங்கையின் வடக்கேயுள்ள யாழ்ப்பாணம் பற்றிய மனதுக்கினிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான இந்த கவர்ச்சிகரமான அழைப்பானது ஒன்பது பெரும் நகரங்களில் இருந்து வாரத்துக்கு 80க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் மூலம் இலங்கைத் தீவை இணைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான இந்தியா உட்பட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பரந்த வலையமைப்பு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.
இதனோடு இணைந்ததாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி எசல பெரஹெர ஆகிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு காட்சியை, நிகழ்வை காண வரும் ஒரு பயணி அடுத்த அம்சங்களையும் கண்டுகளிப்பதற்கு ஏற்றவகையில் தமது பயணத்தை நீடித்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM