தனது தயாரிப்புகளுக்காக அண்மையில் ஏழு பெறுமதி வாய்ந்த சர்வதேச விருதுகளை International Distillers Limited (IDL) பெற்றுள்ளது.
இதன் மூலம் ஸ்பிரிட் (Spirits) தொழிற்துறையில் முன்னணி ஸ்தானம் எனும் அதன் நிலையை அது உறுதிப்படுத்தியுள்ளது. International Wine and Spirit Competition (IWSC) போட்டி மற்றும் Intercontinental Challenge ஆகிய இரண்டு உலகளாவிய பிரபல போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் நிறுவனம் இவ்வெற்றியை அடைந்துள்ளது.
IWSC போட்டியில், IDL நிறுவனத்தின் ஓல்ட் ரிசர்வ் அரக் (Old Reserve Arrack) தங்கப் பதக்கத்தை வென்ற முதலாவது இலங்கை ஸ்பிரிட் உற்பத்தி எனும் வரலாற்றை உருவாக்கியுள்ளது.
அது பாரம்பரிய கலவையின் முதன்மையான எடுத்துக்காட்டாக நிலையை உறுதிப்படுத்தியுள்ளதோடு, உலகின் சிறந்த ஸ்பிரிட் உற்பத்திப் பொருட்கள் மத்தியில் இந்த இடத்தை பிடித்துள்ளது.
இரண்டு ஒப்பற்ற வெவ்வேறு அரக் (Arrack) தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் IDL இன் படைப்பாற்றல் இங்கு பிரகாசித்தது. ஓல்ட் ரிசர்வ் 55 ஓவர் ப்ரூஃப் கிரிஸ்டல் (Old Reserve 55 Overproof Crystal) ஆனது, நடுவர் குழுவைக் கவர்ந்ததோடு, IWSC போட்டியில் அது வெள்ளிப் பதக்கத்தையும், ISC போட்டியில் இரண்டு தங்கத்தையும் வென்றது.
இதேபோல், Oak, Halmilla மற்றும் புதிய எலுமிச்சை சாறுடன் ஒரு தனித்துவமான கலவையான ஓல்ட் ரிசர்வ் 52 ஈஸ்ட் இண்டியாமென், IWSC போட்டியில் ஒரு வெள்ளியையும் ISC போட்டியில் ஒரு தங்கத்தையும் பெற்றது.
இந்த சாதனைகளுக்கு மேலதிகமாக, அரக்கை அடிப்படை ஸ்பிரிட்டாகக் கொண்டு நாட்டிலுள்ள மூலிகைகள் மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட IDL இன் தப்ரபேன் ஜின் (Taprobane Gin) ஆனது, IWSC போட்டியில் ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளியையும், ISC போட்டியில் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச வர்த்தகநாமங்களை கடந்து இரண்டு தங்கத்தையும் பெற்றது.
IDL இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான கலாநிதி கெமல் டி சொய்சா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், "சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த போட்டிகளில் எமக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து நாம் உண்மையிலேயே பெருமையடைகிறோம். இது ஒப்பற்ற, தரமான ஸ்பிரிட்களை உற்பத்தி செய்யும் IDL நிறுவனத்தின் முழு அணியினதும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். " என்றார்.
IDL இன் வெற்றியானது, ஒப்பற்ற ஸ்பிரிட்களை உற்பத்தி செய்வதிலான அவர்களது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் இலங்கை ஸ்பிரிட்களின் நற்பெயரையும் உயர்த்துகிறது. பாரம்பரியத்தை புத்தாக்கத்துடன் கலப்பதன் மூலம், IDL நிறுவனம் தொடர்ச்சியாக இத்தொழில்துறையில் புதிய தரங்களை அமைத்து, உலகளாவிய ஸ்பிரிட்கள் சந்தையில் ஒரு வலிமையான பங்குதாரராக தனது நிலையை வலுப்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM