- திரட்டிய மொத்த வருமானம் 34.5 வீதத்தால் அதிகரித்து ரூபா 232.7 பில்லியனாக உள்ளது.
- வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம், தனி அடிப்படையில் ரூபா 39.6 பில்லியன் மற்றும் திரட்டிய அடிப்படையில் ரூபா 48.2 பில்லியன்.
- வெளி கடன் மறுசீரமைப்பிற்கு உட்பட்டு, வெளிநாட்டு நாணய மதிப்பிலான முதலீடுகளுக்கு தொழில்துறையின் மிகக் குறைந்த வெளிப்பாடு மூலம் தொடர்ந்து பயனடைகிறது.
- வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வழிமுறையில் உள்வாங்கும் நடைமுறை தொடர்ந்து வலுவாக வேகமடைந்து வருகிறது.
2023 ஜூன் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான பெறுபேறுகளை மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளதுடன், மொத்த திரட்டிய தொழிற்பாட்டு வருமானம் மற்றும் வரிக்கு முன் இலாபம் ஆகியவற்றை முறையே ரூபா 48.2 பில்லியன் மற்றும் ரூபா 9.4 பில்லியன் ரூபா ஆக அறிவித்துள்ளது (2022 முதல் அரையாண்டு: ரூபா 80.7 பில்லியன் மற்றும் ரூபா 15.2 பில்லியன்).
2022 ஆம் ஆண்டின் பெரும்பகுதியில் நிலவிய உயர்ந்த வட்டி வீதச் சூழலில் இருந்து எழுந்த அதிக வட்டிச் செலவுகள் காரணமாக, தவணை வைப்பு நிதிக்கான செலவுகள் அதிகரிக்க வழிவகுத்ததுடன், திரட்டிய தேறிய வட்டி வருமானம் 2022 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் ரூபா 31.4 பில்லியன் தொகையாக சரிவடைந்தது. திரட்டிய தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் ரூபா 7.9 பில்லியனாக இருந்தது, இது 2022 இன் முதல் அரையாண்டின் போது ஒரு முறை மட்டுமான விடயங்கள் நீங்கலாக, இதே ஒப்பீட்டு அடிப்படையில் 6.0மூ வளர்ச்சியைக் குறிக்கிறது.
பணவீக்கத்தை பிரதிபலிக்கும் வகையிலான செலவு அழுத்தங்கள், பெரும்பாலாக 2022 இன் பிற்பகுதியில் எழுந்த நிலையில், திரட்டிய மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 12.98மூ ஆல் அதிகரித்து ரூபா 30.2 பில்லியனை எட்டியது (2022 முதல் அரையாண்டு: ரூபா 26.7 பில்லியன்). இது ஏனைய வங்கிகளுடன் ஒப்பீட்டளவில் சிறப்பாக காணப்பட்டதுடன், இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான குழுமத்தின் அதீத முயற்சிகள் மிகவும் நியாயமான அளவுக்கு சாத்தியமான மற்றும் அதன் நியாயமான கட்டுப்பாட்டிற்குள் நிர்வகிக்கப்படுவதைக் காண்பிக்கிறது.
திரட்டிய வாடிக்கையாளர்களின் மொத்த வைப்புத்தொகை ரூபா 2,565.4 பில்லியனை எட்டியது - அதாவது 4.7மூ அதிகரிப்பாக காணப்பட்டதுடன், திரட்டிய தேறிய கடன்கள் 6.7மூ ஆல் சுருங்கி, ரூபா 1,788.0 பில்லியனாக இருந்தது. இது பிரதானமாக, அதன் வெளிநாட்டு நாணயக் கடன் பேரேட்டில் ரூபா மதிப்பின் வீழ்ச்சியின் தாக்கத்தை பிரதிபலித்தது. மற்றும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கடன் வளர்ச்சியில் வங்கியும் குழுமமும் எடுத்த எச்சரிக்கையுடனான அணுகுமுறை, மேலும் நாட்டின் சூழ்நிலைகள் காரணமாகக் கருதப்படுகின்றன. மொத்த திரட்டிய சொத்துக்கள் இக்காலப்பகுதியின் முடிவில் ரூபா 3,047.5 பில்லியனாக இருந்தன (2022 இன் முடிவில்: ரூபா 3,133.1 பில்லியன்).
2023 ஜூன் 30 இல் வங்கியின் அடுக்கு ஐ மற்றும் மொத்த மூலதனப் போதுமை விகிதங்கள் முறையே 11.7மூ மற்றும் 15.9மூ ஆக இருந்ததுடன் (2022 இறுதியில்: 11.9மூ மற்றும் 16.3மூ), அதே சமயம், திரட்டிய அடிப்படையில், இது முறையே 13.1மூ மற்றும் 16.8மூ ஆக இருந்தது (2022 இன் முடிவில்: 13.3மூ மற்றும் 17.2மூ). 2017 ஜூலை 1 அன்று பாசல் ஐஐஐ (டீயளநட ஐஐஐ) தொடங்கப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் வங்கியின் கடன் தீர்ப்பனவு நிலை மட்டங்கள் வலுவானவையாக இருக்கின்றன. மேலும் தற்செயல் நோக்கங்கள் உட்பட அதன் ஒழுங்குமுறை மூலதனத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும், குறிப்பிட்ட காலப்பகுதியில் வங்கி அனைத்து முக்கிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக சந்தித்தது.
வங்கி மற்றும் குழுமத்தின் பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ,
“சிக்கலான சவால்கள் மற்றும் மிகவும் மாற்றங்கள் கொண்ட பேரின பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில் வங்கியின் பெறுபேறுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். பல மட்டுப்படுத்தல் காரணிகள் இருந்தபோதிலும், வங்கியின் வணிகத்தின் பல அம்சங்களை வலுப்படுத்த எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்ற பல முயற்சிகளின் பலன்களை வங்கி பெற்றுள்ளது.
எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் பேரின பொருளாதார மட்ட அடிப்படைகள் நேர்மறையான முன்னோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளைக் காண்பிக்கின்றன. இப்போது எமது கவனம் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதிகளில் அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்பதில் உள்ளது. ஏனையவற்றுடன், நிதியியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதே எமது முன்னுரிமையாக இப்போதும், எப்போதும் உள்ளதுடன் நிதிச் சேவைகளுக்கான அணுகலை, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் புத்தாக்கமான அணுகுமுறைகள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் மூலம் விரிவுபடுத்துவதில் நாம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறோம்.
சமீப காலங்களில் முகங்கொடுத்த சவால்கள் கடந்த காலங்களில் காணப்பட்டதைப் போலல்லாமல் இருந்தாலும், தொழில்துறையின் தகவமைப்பு, நெகிழ்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் வரவிருக்கும் சவால்களைப் பற்றி முழுமையாக நாம் அறிந்திருந்தாலும், நாம் மிகவும் நேசிக்கும் நாட்டிற்கும் நாம் அக்கறையுடன் சேவை ஆற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கும் நிலைத்தன்மையுடனான பெறுமதியினை தோற்றுவிப்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம். எமது வெற்றிக்கு எமது அணியின் அர்ப்பணிப்பு மற்றும் எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகியவற்றிற்கு நாம் கடமைப்பட்டிருப்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை,” என்று குறிப்பிட்டார்.
இப்பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா,
“இந்த ஆண்டின் முதல் பாதி முழுவதும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நாம் பயணித்தோம். தீவிரமாக பாதகங்கள் நிலவிய போதும், ஒட்டுமொத்தமாக அவற்றை எதிர்கொண்டு, எமது நெகிழ்திறனை மீண்டும் ஒரு தடவை நாம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளோம். இவை இறுதியில் நமது மூலோபாய முயற்சிகள் மற்றும் செயல்பாட்டு சுறுசுறுப்பின் வெற்றிக்கு சான்றளிக்கின்றன. எதிர்காலத்தைக் கருதுகையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதார வளர்ச்சி வேகமடையும் மற்றும் வட்டி வீதங்கள் மேலும் கீழிறங்கும் வாய்ப்புள்ள நிலையில், ஒரு பொறுப்புள்ள நிதி நிறுவனமாக, ஏற்கனவே அனைத்து முக்கிய பொருளாதார வணிகப் பிரிவுகளுக்கும் கடன் வசதிகளை நீடிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த முயற்சிகளுக்கு அவற்றை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
எமது திரவத்தன்மையை மேம்படுத்துதல், முக்கியமான மூலோபாய முயற்சிகளை கட்டாயப்படுத்துதல் மற்றும் வசூல் சேகரிப்புகள் மற்றும் மீள் அறவீடுகளில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்துதல் ஆகியன எமது முன்னுரிமை மையமாக உள்ளது. நிதியியல் துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்கள் வங்கியானது எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்கவும், புத்தாக்கப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது. நாம் மிகுந்த நம்பிக்கையுடன் ஆவலாக உள்ளோம்!” என்று குறிப்பிட்டார்.
1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது, ரூபா 3.0 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்கள் மற்றும் ரூபா 2.5 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய வைப்புத்தொகையுடன் நாட்டின் இரண்டாவது பெரிய நிதிச் சேவை வழங்குனராகத் திகழ்ந்து வருகிறது. தற்போது, நாடு முழுவதும் 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களை வங்கி கொண்டுள்ளதுடன், 14.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM