மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

31 Aug, 2023 | 01:10 PM
image

யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

போயா  தினமான புதன்கிழமை (30) மதுபானத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

நல்லூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 28 வயதான சந்தேக நபரிடமிருந்து 10  சாராயம் போத்தல்கள் மற்றும் 12 லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன. குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 சாராய போத்தல்கள்  என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53