இலங்கை அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 367 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய டுபிளசிஸ் 185 ஓட்டங்களை விளாசினார்.

மறுமுனையில் டிவில்லியர்ஸ் 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 368 ஓட்டங்களை பெறவேண்டும்