டொக்டர் தீப்தி - தொகுப்பு அனுஷா
இன்றைய சூழ்நிலையில் இளம் பெண்களும், பெண்மணிகளும் கல்வி கற்றதன் காரணமாகவும், சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதற்காகவும் பணிக்கு செல்கிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மற்றும் பணிக்கு சென்று கொண்டிருக்கும் பெண் மற்றும் பெண்மணிகளின் ஐந்து முதல் பத்து சதவீதத்தினர் பி சி ஓ எஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய நோயிற்கு முகத்தில் விரும்பதகாத இடத்தில் முடிகள் உற்பத்தியாவதும் ஒரு அறிகுறி என்பதால் இதனை அகற்றுவதற்கு நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குரலில் மாற்றம், தலைப்பகுதியில் வழுக்கை, முகப்பரு, மார்பக அளவுகளில் மாற்றம், தசை வலி அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதி, இவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் இவர்களது முகத்தில் விரும்பத்தகாத இடத்தில் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை முடிகள் வளரத் தொடங்கும். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் ஹிர்சுட்டிசம் என்று பெயர்.
பெண்கள் பூப்பெய்திய பிறகு அவர்களுடைய மாதவிடாய் சுழற்சி தொடக்க காலத்தில் சமச்சீரற்ற தன்மையுடன் உண்டாகும். ஆனால் பலருக்கு பூப்பெய்திய சில ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய பாதிப்பு இருக்கக்கூடும்.
இவர்களுக்கு அவர்களுடைய ஹோர்மோன் சுரப்பியில் மாற்றங்கள் ஏற்படுவதாலும், ஆண் ஹோர்மோன்கள் எனப்படும் ஆன்ட்ரோஜன் அல்லது டெஸ்டோஸ்டிரோன்கள் ஹோர்மோன் இயல்பான அளவைவிட கூடுதலாக சுரப்பதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
இதன்போது பெண்களுக்கு முகம், மார்பு, அடி வயிறு, தொடை பகுதி, முதுகு ஆகிய பகுதிகளில் விரும்பத்தகாத அளவிற்கு முடிகள் வளரத் தொடங்கும். சிலருக்கு மட்டும் இது அடிப்படையான வேறு வகையினதான மருத்துவ பிரச்சனையின் அறிகுறியாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது பிசிஓஎஸ் மற்றும் பி சி ஓ டி ஆகியவற்றின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கு உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் தோல் சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இவர்களுக்கு ஹோர்மோன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பின் தன்மை கண்டறியப்படுகிறது.
ஹோர்மோன் சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் சமசீரற்ற தன்மை தான் காரணம் என்றால், அதற்குரிய சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள்.
இதன் பிறகும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் லேசர் தெரபி மற்றும் எலக்ட்ரோலிசஸ் ஆகிய நவீன சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM