நடிகர் குணாநிதி நடிக்கும் 'அலங்கு'

30 Aug, 2023 | 02:03 PM
image

'செல்ஃபி' எனும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குணாநிதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'அலங்கு' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'அலங்கு'.

இந்த திரைப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், சரத் அப்பானி, காளி வெங்கட், சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அஜிஷ் இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. சபரிஷ் மற்றும் எஸ். ஏ. சங்கமித்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ':தமிழக கேரள எல்லை பகுதியை ஒட்டி வனப்பகுதியில் நடைபெறும் உண்மை சம்பவங்களை தான் இப்படத்தின் திரைக்கதை பேசுகிறது. 

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவிற்கும் இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான சம்பவங்கள் தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

 இப்படத்திற்கு 'அலங்கு' என பெயர் சூட்டப்பட்டுள்ளது அலங்கு என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும்.  இந்த நாய் ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக பணியாற்றியதாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகிறது. 

ஆனால் இந்த இனம் காலப்போக்கில் அழிந்து விட்டது. இந்த கதையின் அடிப்படைத் தன்மைக்கும் இவை பொருந்தி வருவதால் அலங்கு என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வனம் சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்