வவுனியாவில் அரச உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி  நிதிமோசடியில் ஈடுபட்டபோது தாதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிய 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் உத்தியோகம் பெற்றுத்தருவதாக தெரிவித்து நால்வரிடம் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினைப் பெற்றுள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

 இன்று காலை பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த தாதியை பொலிஸார் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் குறித்த தாதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.