செவாக்கின் சாதனையை முறியடித்த  பென் ஸ்டோக்ஸ்

Published By: Priyatharshan

04 Jan, 2016 | 01:33 PM
image

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விரைவாக இரட்டைச்சதம் அடித்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஷேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

தென்னாபிரிக்க - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட்   போட்டி கேப்டவுனில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியிலி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் எடுத்தது.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பென் ஸ்டோக்ஸ் 74 ஓட்டங்களுடனும் பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களுடனம் களத்திலிருந்தனர்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 105 பந்தில் 100 ஓட்டங்களை கடந்தார்.

 இதன்பின் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் விளாசித் தள்ளினார்.

இதனால் அடுத்த 100 ஓட்டங்களை 63 பந்தில் கடந்தார். இதனால் அதிகவேகமாக இரட்டைச் சதம் அடித்த 2 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன் இலங்கைக்கு எதிராக செவாக் 168 பந்தில் இரட்டைச் சதம் பெற்றிருந்தார். இதை பென் ஸ்டோக்ஸ் 163 பந்தில் அடித்து செவாக்கை முந்தினார். பென் 198 பந்தில் 30 பவுண்டரி, 11 சிக்சர்  உட்பட 258 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

இதேவேளை, நியூசிலாந்து அணியின் நாதன் ஆஸ்லே 153 பந்தில் இரட்டைச் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49