அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து , அதில் தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் , மாசியாப்பிட்டி பகுதியில் உள்ள வலி.தென் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் வீட்டினுள் செவ்வாய்க்கிழமை (29) அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பலே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
வீட்டினுள் நுழைந்தவர்கள் 4 மாத குழந்தையை தூக்கி கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, 11 பவுண் தங்க நகைகள், பெறுமதியான 3 கையடக்க தொலைபேசிகள், 2 இலட்ச ரூபாய் பணம் மற்றும் வங்கி புத்தகம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை கும்பல் தப்பி செல்லும் போது, "பொலிஸாருக்கு அறிவித்தால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என வீட்டாரை மிரட்டி விட்டு, வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து, தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM