மெனின்கோகோல் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் 8 மாத குழந்தைக்கும் காலிசிறையில் அந்த நோயால் உயிரிழந்த கைதிகள் இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உயிரிழப்பி;ன் பின்னர் பக்டிரீயா சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்ற கவலை உருவாகியுள்ளது.
குழந்தை கராப்பிட்டிய மருத்துவமனையில் மெனின்கோகோல் நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.மாதிரிகள் இன்னமும் ஆராயப்பட்டு வருவதால் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.
எனினும் அந்த குழந்தைக்கும் காலிச்சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் கொனரா சோமரட்ண தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் குழந்தையின் குடும்பத்தவர்களுக்கும் உயிரிழந்த கைதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அன்டிபயோட்டிக் ஊசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவராவது நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM