(எம்.சி.நஜிமுதீன்)

சீன அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா தரகுப் பணம் வழங்கியதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியிருப்பது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டனெ முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

“குறித்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்குமிடையில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் எவ்வித பேச்சுவாத்தையும் நடைபெறவில்லை” என சீனத் தூதுவராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பாரியளவான ஊழல்  மோசடி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காது தமக்கு எதிரானவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தற்போதைய தலைவர்களின் கொள்கைத் திட்டம் இவ்வாறாகத்தான் உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிரஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.