இலங்கை மற்றும் தென்னாபிரிக்க  அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி கேப்டவுனில் உள்ள நியுவ்லேன்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே தொடரை இழந்துள்ள இலங்கை இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கவுள்ளது. எனினும் தொடரை “வைட் வொஷ்” முறையில் வெற்றிக்கொள்ளும் நம்பிக்கை உள்ளதாக தென்னாபிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

தென்னாபிரிக்க அணி சார்பில் பெஹலுக்வாயோவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக டெப்ரைஸ் சம்ஷி அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக சந்துன் வீரகொடி அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சுரங்க லக்மாலுக்கு பதிலாக குலசேகர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.