'புரட்சித் தமிழன்' சத்யராஜ், 'ஜெயிலர்' வசந்த் ரவி கதையின் நாயகர்களாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் 'வெப்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் அப்படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பங்குபற்றி, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வெப்பன்'. இதில் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, கனிகா, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, ராஜீவ் மேனன், கஜராஜ், பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படத்தின் நாயகியான தான்யா ஹோப் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்.
மேலும், இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், நாயகன் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM