தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 11 பேர் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவாறு தங்களை நிரந்தர பணியாளர்களாக்கும் பட்சத்திலேயே, ஆர்ப்பாட்டம் கைவிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், குறித்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்குவதற்கு கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.