தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
வத்தளை மாபொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
நேற்று மாலை 3.45 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர் வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்திருந்த பயணப் பைகளை சோதனையிட்டபோதே 14 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், இந்த வர்த்தகர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM