பசியாறியவுடன் உங்களின் ரத்த சர்க்கரையின் அளவில் சமசீரற்றத்தன்மை ஏற்படுகிறதா...? அவதானம் தேவை..!

Published By: Vishnu

28 Aug, 2023 | 01:32 PM
image

எம்மில் பலரும் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியுடன் பின்பற்றுவர். குறிப்பாக ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையான HBA1C எனும் அளவு சீராக இருந்தாலும், காலை வேளையிலோ. மதியமோ அல்லது இரவிலோ பசியாறியவுடன் ரத்த சர்க்கரையின் அளவு திடீரென அதிகரித்து விடும். இதனை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போராடுவர்.

வேறு சிலர் பசியாறியவுடன் ரத்த சக்கரையின அளவு அதிகரிப்பது குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர்கள் இது தவறு என சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில் ரத்த சர்க்கரையின் அளவு பசியாறியவுடன் அதிகரித்தால், அதன் காரணமாக இதயம் மற்றும் இதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என எச்சரிக்கிறார்கள்.

இதன் காரணமாக பசியாறியவுடன் திடீரென அதிகரிக்கும் ரத்த சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான முறையான ஆலோசனைகளையும், மருத்துவ சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

பொதுவாகவே நாம் பசியாறியவுடன் எம்முடைய உடலில் Meal Stimulated Insulin எனும் இன்சுலின் சுரப்பு விரைவாகவும், அடர்த்தியாகவும் சுரக்கிறது. இதனால் நாம் பசியுடன் இருக்கும் போது அல்லது பசியாறத் தொடங்கும் போது இவை சுரந்து ரத்த சர்க்கரையில் அளவினை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியாறியவுடன் வேகமாகவும், விரைவாகவும் சுரக்க வேண்டிய இத்தகைய பிரத்யேக இன்சுலின் சுரப்பு என்பது இயல்பான அளவைவிட குறைவாகவே சுரக்கும். இதனால் பசியாறியவுடன் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.‌

இது தொடர்பாக நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றத்தை குறித்து உங்களுடைய சர்க்கரை நோய் நிபுணரிடம் அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர் நீங்கள் சாப்பிடும் உணவு, மருந்து, மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசியை செலுத்திக் கொள்ளும் தருணங்கள். ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றத்தை துல்லியமாக அவதானித்து பரிந்துரைப்பர். அதனை உறுதியாக பின்பற்ற தொடங்கினால்  பசியாறியவுடன் அதிகரிக்கும் இரத்த சர்க்கரையில் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12