கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பெத்தான்குடி மக்களின் திருவிழா

Published By: Vishnu

28 Aug, 2023 | 12:14 PM
image

கிழக்கில் தேரோடும் கோயில் எனவும், புல்லுண்ட கல் நந்தி அமைந்துள்ளதும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மிகவும் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 9 ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மூல மூத்தியாகிய தாந்தோன்றீஸ்வரருக்கும், கொடித் தம்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்நு சுவாமி உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தாந்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் விசேடமாக அமைக்கப்பட்ட சப்புறத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், விஷ்னுபகவான் குதிரை வாகனத்திலும், சண்டேசுவரர் எருது வாகனத்திலும் மேள தாள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் வெளி வீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது.

ஆலய தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் பெத்தான்குடி மக்களின் தலைவர் வா.தம்பித்துரைச்சாமி, பெத்தான்குடி மக்கள், ஆலய நிருவாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 19.08.2043 அன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெறிருந்தது, தேரோட்டம் எதிர்வரும் 03.09.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் அன்றயதினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்று, மறுநாள் 04.09.2023 அன்று அதிகாலை  மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14