திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதி திடீரென சுகயீனமடைந்து உயிரிழப்பு! : மொரகஹஹேனவில் சம்பவம்

28 Aug, 2023 | 10:57 AM
image

திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு நடனமாடியுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் சுகயீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக பொலிஸாரின் விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43