மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு வியாபாரிகளை ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது ஒரு போதைப்பொருள் வியாபாரி போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கியதையடுத்து அவரை வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவதினமான நேற்று பிற்பகல் பொலிஸார் பாலமீன்மடு பிரதேசத்தில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, வியாபாரத்துக்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற 31 வயது மற்றும் 19 வயதுடைய இருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 10 மில்லி கிராம் மற்றும் 15 மில்லிக்கிராம் நிறையுடைய போதைப்பொருளை மீட்டனர்.
இதில் 19 வயதுடையவர் பொலிஸாரை கண்டு ஐஸ்போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கியதையடுத்து, அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மற்றைய வியாபாரியை விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (28) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM